அதிகாலையிலேயே பரபரத்த மதுரை! 4 மணி நேரமாச்சு! திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் ரெய்டு ஓவர்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: கல்குவாரி மற்றும் செம்மண் எடுத்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தி வீட்டில் இன்று அதிகாலை முதலே மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய அதிரடி ரெய்டு தற்போது முடிவடைந்தது. இந்த ரெய்டு சுமார் 4 மணி நேரம் நடத்தப்பட்டது. இதில் ஏதேனும் ஆவணங்கள், மின்னணு பொருட்கள் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

மதுரை பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் விதிகளை மீறி கல், மண் எடுத்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இதன் அடிப்படையில் தற்போது ரெய்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

DMK TVK Moorthy

மதுரையை சேர்ந்த முன்னாள் திமுக அமைச்சர் பி.மூர்த்தியின் வீட்டில் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். மதுரை மாவட்டம் பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கிரஷர் நிறுவனங்கள், செம்மண், கல்குவாரிகளில் அரசு அனுமதித்த அளவை விட அதிகமாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

என்ன வழக்கு?

இது தொடர்பாக கனிமள வளத் துறையினர் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி பகுதிகளில் குவாரி குத்தகைதாரர் ஒருவர், அனுமதி பெறாத நிலத்தில் இருந்து சட்டவிரோதமாகவும் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகவும் சரளைக் கற்கள வெட்டி எடுத்துள்ளதாகக் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் அரசுக்கு முறையே ரூ 2.32 கோடி மற்றும் ரூ 3.07 கோடி என மொத்தம் ரூ 5.39 கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கனிமவளத்துறை ஆய்வின் அடிப்படையில் வருவாய்த் துறை அதிகாரிகள் தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டது.

சோதனை நிறைவு

இதன் அடிப்படையில் மதுரை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தனித்தனியாக இரு வழக்குகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில்தான் மதுரை ஐயர் பங்களாவில் உள்ள மூர்த்தியின் வீட்டில் காலை முதலே ரெய்டு நடத்தப்பட்டது. அது போல் எழில் நகரில் உள்ள 2 வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. தற்போது அவரது வீட்டில் சோதனைகள் நிறைவடைந்தது. கல் குவாரி முறைகேடு தொடர்பாக ஏதேனும் ஆவணங்கள் மூர்த்தி வீட்டில் இருக்கிறதா எனபதை அறிய போலீஸார் ரெய்டு நடத்தினர்.

மறுத்த மூர்த்தி

4 மணி நேரம் நடந்த ரெய்டு குறித்து மூர்த்தி கூறியிருப்பதாவது:"என் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை. என்னிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. நான் எந்த தவறையும் செய்யவில்லை, எந்த கல்குவாரி முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. இது உண்மைக்கு புறம்பான வழக்கு" என்றார்.

யார் இந்த மூர்த்தி?

மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் பி.மூர்த்தி. அவர் 2006 ஆம் ஆண்டு சோழவந்தான் எம்எல்ஏவாகவும் 2016, 2021 ஆகிய தேர்தல்களில் மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். கடந்த 2021 ஆம் ஆண்டு மே 7 ஆம் ஆண்டு தமிழகத்தின் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சராக இருந்தார்.

ஆடம்பர திருமணம்

கடந்த திமுக ஆட்சி காலத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு மூர்த்தியின் மகன் தியானேஷ் திருமணம் ஆடம்பரமாக நடத்தப்பட்டது. மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள மைதானத்தில் நடந்த திருமண விழாவில் ஒரு லட்சம் பேருக்கு அசைவ விருந்து அளிக்கப்பட்டது. மொய் கவுன்ட்டர்களே 50 இருந்ததாகவும் சொல்லப்பட்டது. இதனால் மூர்த்தி தனது மகனின் திருமணத்திற்கு அபரிமிதமான செலவை செய்திருப்பார் என விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இதை மூர்த்தி மறுத்திருந்தார். அப்போது அவர் கூறுகையில் "பல கோடி ரூபாய் செலவில் திருமணம் நடத்தவில்லை. ரூ 3 கோடியில்தான் திருமணம் நடத்தினேன்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+