குப்பைத் தொட்டியில் கிடந்த ‘துப்பாக்கி’! அதிர்ந்து போன மதுரை.. களத்தில் இறங்கிய கரிமேடு போலீஸ்!
மதுரை : மதுரை மத்திய சிறை அருகே குப்பை தொட்டிக்குள் கையடக்க துப்பாக்கியால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மத்திய சிறை 1865-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. 150 ஆண்டுகள் பழமையான இந்த சிறைச்சாலை தென் மாவட்டங்களில் மிக முக்கியான சிறைச்சாலையாக உள்ளது.
இந்த சிறையில் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் என சுமார் 1500 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மத்திய சிறை
மதுரை நகர் பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஜெயிலை புறநகர் பகுதிக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக போதிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கோரிக்கை
மேலும் சிறைக்குள் அடிக்கடி கைதிகள் மோதல் சம்பவங்களும், கஞ்சா, ஆயுதங்கள் வீசப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மதுரை மத்திய சிறை அருகே குப்பை தொட்டிக்குள் கையடக்க துப்பாக்கியால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.

குப்பைத் தொட்டி
மதுரை மத்திய சிறைச்சாலை வாசல் அருகே அமைந்திருந்த குப்பை தொட்டியில் இன்று வழக்கம் போல் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்திருந்தனர். அப்போது அந்த குப்பை தொட்டியில் சிறிய அளவிலான கையடக்க ஏர்கன் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள், குப்பை தொட்டியில் துப்பாக்கி கிடப்பதை குறித்து கரிமேடு காவல் நிலையத்திற்கு சிறை நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்ததில் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கையடக்க ஏர்கன்
தொடர்ந்து கையடக்க ஏர்கன் பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுதடைந்து இருப்பதால் யாரேனும் குப்பைத் தொட்டியில் வீசி சென்று இருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர். மதுரையைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாகவே குப்பைத்தொட்டிகளில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே போலீசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டு அசம்பாவிதங்கள் ஏற்படும் நடக்குமுன் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications