குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்.. துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர்கள்.. குவியும் பாராட்டு
மதுரை: மதுரையில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பற்றிய போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மதுரை மாவட்டம் திருப்பாலை பகுதியை சேர்ந்தவர் திலகவதி. இவருடைய கணவர் கார்த்திக்பாண்டியன். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை உள்ளனர்.
திலகவதி நாராயணபுரம் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். ஆனால்
கணவர் கார்த்திக் பாண்டியன் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

தகராறு
இதன் காரணமாக குடும்பத்தில் போதிய வருமானம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. குடும்பத்தை நடத்த முடியாத சூழல் எற்பட்டது. ''நீங்கள் வேலைக்கு சென்றால்தான் குடும்பத்தை நடத்த முடியும்'' என்று திலகவதி, கணவரிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார். இது தொடர்பாக இதனால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு எற்பட்டு வந்துள்ளது.

மனவேதனை
இதனால் திலகவதி மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். தனது ஒரு வயது ஆண் குழந்தையை தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை தொடர்ந்து தற்கொலை செய்து விடுவோம் என்ற விபரீத முடிவை அவர் எடுத்துள்ளார். பெண் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறி மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் சென்று அமர்ந்துள்ளார்.

தற்கொலை முயற்சி
பின்னர் தான் கையில் வைத்திருந்த தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு தெப்பக்குளத்தில் விழுந்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த தெப்பக்குளம் காவல்நிலையத்தை சேர்ந்த முதல்நிலை காவலர்களான செந்தில் மற்றும் வெங்கடேஷ்பாபு இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

காப்பாற்றியுள்ளனர்
உடனடியாக ஓடிச்சென்ற அவர்கள் திலகவதி மற்றும் பெண் குழந்தையை தடுத்து நிறுத்தி காப்பாற்றியுள்ளனர். திலகவதி தூக்க மாத்திரைகளை சாப்பிட்டதால் அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு திலகவதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாராட்டு
துரிதமாக செயல்பட்டு தற்கொலையை தடுத்து நிறுத்தி இருவரின் உயிரை மீட்ட காவலர்களின் செயலை பொதுமக்கள் பாராட்டி சென்றனர். தற்கொலை எதற்கும் மருந்து ஆகாது. வாழ்க்கையில் போராடி ஜெயிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications