5 மணி நேரம் மின் வெட்டு.. ஒரு வாரமாக இதே வேலையா போச்சு.. டென்ஷனான அலங்காநல்லூர் மக்கள்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை அலங்காநல்லூர் அருகே கடந்த ஒரு வாரத்தில் 5 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதை கண்டித்து பொதுமக்கள் நேற்றிரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிலும் சில மாணவர்கள் மின் தடையால் கல்வி பாதிக்கப்படுவதாக கூறி புத்தகங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டது கவனத்தை ஈர்த்தது.

தவெக ஆட்சி அமைந்த நாள் முதலே தொடர்ச்சியாக மின் வெட்டு பிரச்சனை அதிகரித்து வருகிறது. முதல்வர் விஜய்யின் சொந்த தொகுதியான பெரம்பூர் தொகுதியிலேயே மின்சாரம் துண்டிக்கப்படுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆளுங்கட்சியும் முறையாக பதில் அளிப்பதில்லை.

Power Cut

மின்துறை அமைச்சர் நிர்மல்குமார், பஞ்சாப் மாநிலத்தில் 14 மணி நேரம் மின் வெட்டு இருப்பதாக கூறுகிறார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் போது வராத மின் வெட்டு, தவெக ஆட்சி அமைந்த உடன் வந்தது ஏன் என்ற கேள்விக்கு முறையாக பதில் அளிக்கவில்லை. அதேபோல் மின்சார கட்டணமும் அறிவிக்கப்படாமல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை மக்களிடையே கடுமையான எதிர்ப்பை ஆளுங்கட்சி மீது ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போது சென்னை மட்டுமல்லாமல் பல்வேறு நகரங்களிலும் மின் வெட்டு பிரச்சனை அதிகரித்துள்ளது. மதுரை அருகே அலங்காநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக 5 மணி நேரம் வரை மின் வெட்டு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக இரவில் 2 முதல் 6 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவது வழக்கமாகி இருக்கிறது.

இதுதொடர்பாக புகார் அளித்த போது மின் வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவர்கள் பலரும் கல்வி பாதிக்கப்படுவதாக தங்களின் பெற்றோரிடம் கூறி இருக்கின்றனர். இந்த நிலையில் நேற்றிரவு அலங்காநல்லூர் - மாட்டுத்தாவணி செல்லும் சாலையில் பொதுமக்கள் 50க்கும் அதிகமானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சாலை மறியலில் தங்களின் பெற்றோருடன் மாணவர்களும் புத்தகங்களுடன் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த விவகாரம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்களை சமாதானம் செய்தனர். இருப்பினும் மின் வெட்டு பிரச்சனைக்கு உரிய தீர்வு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+