நாங்க லோக்கல்..! டோல் கேட் கட்டணம் கொடுக்க முடியாது! கிளர்ந்து எழுந்த மதுரை மக்கள்!
சுங்கச்சாவடி கட்டணத்தை செலுத்த மாட்டோம் என்று கூறி மதுரை மாவட்டம் கப்பலூரில் உள்ளூர் வாகன ஓட்டிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை: கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்த முடியாது என முற்றுகையிட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நான்குவழிச்சாலையில் நடைபெறும் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றி அதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையாக வைத்து வருகின்றனர்.

உள்ளூர் வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதால் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணத்தை கட்டமாட்டோம் என இப்பகுதி பொதுமக்கள் மறுத்து வருவதோடு அவ்வப்போது சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தனர்.
இதையடுத்து கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், உள்ளூர் வாகனங்கள் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் உள்ளூர்.வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் செலுத்தச் சொல்லி வலியுறுத்தியதால் 4 நாட்களுக்கு முன்பு வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தற்போது சுங்கச்சாவடி கட்டணத்திற்கு நிரந்தரமான தீர்வு வேண்டும் எனக் கோரி சுங்கச்சாவடியை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராடி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
போராட்டம் காரணமாக சுங்கச்சாவடி வழியாக தென்காசி, சிவகாசி, ராஜபாளையம், கேரளா ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications