அந்த மனசு தான் சார்.. மாடுபிடி வீரர் விஜய் செய்த தரமான செயல்! அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ருசிகரம்!
மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளையை அடக்கியதற்காக வழங்கப்பட்ட பரிசை காளையை அவிழ்த்துவிட்ட பள்ளி மாணவிக்கு கொடுத்து கவனம் ஈர்த்திருக்கிறார் மாடுபிடி வீரர் விஜய்.
கிடைத்த வரை லாபம் எனக் கருதும் இந்தக் காலத்தில் தனக்கு வழங்கப்பட்ட பரிசை காளையின் உரிமையாளருக்கே வழங்கியுள்ளார் மாடுபிடி வீரர் விஜய்.
இதனிடையே மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கிய சிறந்த வீரராக விஜய் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
தமிழர் திருநாளான இன்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் மிக உற்சாகமாக ஜல்லிக்கட்டு நடைபெற்று முடிந்துள்ளது. காலை 7.30 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 4 மணியளவில் நிறைவடைந்துள்ளது. இதனிடையே அழகுபேச்சி என்ற பள்ளி மாணவி தனது காளையை களத்தில் அவிழ்த்துவிட்ட நிலையில் அதனை மாடுபிடி வீரர் விஜய் லாவகமாக அடக்கினார். இதையடுத்து ஜல்லிக்கட்டு விழா குழு சார்பாக அவருக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

அந்த மனசு தான்
அந்த பரிசுகளை பெற்ற வீரர் விஜய், ஏமாற்றத்துடன் தனது காளையை கயிறு போட்டு பிடித்துச் செல்ல முயன்ற பள்ளி மாணவி அழகுபேச்சியிடம் கொடுத்து அவரை ஊக்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தார். இது போல் செய்ய வேண்டும் என்ற மனசு எத்தனை பேருக்கு வரும் என்றும் தெரியாது. கிடைத்த வரை லாபம் எனக் கருதும் இந்தக் காலத்தில் தனக்கு வழங்கப்பட்ட பரிசை காளையின் உரிமையாளருக்கே வழங்கி கவனம் ஈர்த்திருக்கிறார் மாடுபிடி வீரர் விஜய்.

மின் வாரிய ஊழியர்
மாடுபிடி வீரர் விஜய்யை பொறுத்தவரை மின் வாரியத்தில் ஹேங் மேனாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 23 காளைகளை அடக்கி களத்தில் சிறந்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள விஜய், ஜல்லிக்கட்டு வளர்ப்போரை ஊக்கப்படுத்தும் விதமாக தனக்கு தரப்பட்ட அண்டா, குண்டா உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை எந்தக் காளையை தாம் அடக்கினோரோ அந்த காளையின் உரிமையாளருக்கே வழங்கினார்.

அசம்பாவிதம் இல்லாமல்
இதனிடையே அமைச்சர் மூர்த்தி சிறந்தமாடுபிடி வீரர் என்ற அடிப்படையில் விஜய்க்கு இன்று தங்கக்காசுகளை பரிசாக அளித்தார். எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முடிந்ததால் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications