தொண்டர்களுக்கு தன் கையாலேயே உணவு சமைத்த ஆர்பி உதயகுமார்.. ஆலோசனை கூட்டத்திற்கு தடபுடல் ஏற்பாடு!
மதுரை : எடப்பாடி பழனிசாமி அறிவித்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்காக, தானே காய்கறி வெட்டி சமையலில் இறங்கினார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
திமுக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், அது தொடர்பாக ஆலோசனை நடத்த மதுரை புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், தொண்டர்களுக்காக தனது குடும்பத்துடன் சேர்ந்து ஆர்.பி.உதயகுமார் தானே முன்னின்று உணவு சமைத்து அசத்தியுள்ளார்.

அதிமுக ஆர்ப்பாட்டம்
திமுக அரசால் உயர்த்தப்பட்ட சொத்து வரி, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்து அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, வரும் 9ஆம் தேதி பேரூராட்சி பகுதிகளிலும், 13ஆம் தேதி நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளிலும், 14 ஆம் தேதி ஒன்றியங்களிலும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

நிர்வாகிகள் ஆலோசனை
அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது பற்றிய ஏற்பாடுகளை மேற்கொள்வது பற்றி பல்வேறு மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டங்களை அதிமுக நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் நடைபெறுகிறது.

தன் கையாலேயே
இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிர்வாகிகளுக்கு தன் கையாலேயே உணவுகளை சமைத்துள்ளார் ஆர்பி உதயகுமார். சமையல் கலைஞர்களுடன் இணைந்து, தனது தாயார் மீனாள், தனது மகள் பிரியதர்ஷினி ஆகியோருடன் இணைந்து, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சமையல் பணிகளில் ஈடுபட்டார்.

காய்கறி வெட்டி சமைத்த உதயகுமார்
சாம்பார், புளி குழம்பு, கூட்டு, பொரியல் ஆகியவற்றிற்கு தேவையான காய்கறிகளை வெட்டிய முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், உணவு தயாரிக்கும் பணிகளிலும் தனது குடும்பத்தினரோடு முன்னின்று உணவுகளை தயாரித்தார். கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்குப் பரிமாறுவதற்காக இலை வெட்டுவது வரை தானே முன்னின்று அனைத்தையும் செய்துள்ளார் ஆர்பி உதயகுமார். இந்நிகழ்வால் அதிமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications