"டைம்" கேட்ட சவுக்கு சங்கர்! ஏற்கனவே ஒத்திவைத்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது! பரபர மதுரை
மதுரை: கஞ்சா வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பான விசாரணை இன்று மதுரை கோர்ட்டில் நடைபெற உள்ளது. இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தனியார் யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது கோவை சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.. இதையடுத்து, தேனியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கைது செய்த போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதேபோல தேனியில் அவர், தனது உதவியாளர் மற்றும் டிரைவருடன் தங்கியிருந்த விடுதியில் கஞ்சா பதுக்கியதாக பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
விசாரணை: இந்த வழக்கு தொடர்பான விசாரணை மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக சவுக்கு சங்கரை கைது செய்து, மதுரை மாவட்ட கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். மேலும், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு 2 நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் தரப்பு வக்கீல் யாருமே ஆஜராகவில்லை...
ஆவணங்கள்: கோவையில் இன்னொரு வழக்கில் ஆஜராக செல்வதால் கால அவகாசம் கோரப்பட்டது. அதுமட்டுமல்லாமல், வழக்கு தொடர்பான சில ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பதாலும் சவுக்கு சங்கர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வருகின்ற 30ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி செங்கமலச் செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்க கூடாது என கூறி குறிஞ்சியர் பெண்கள் ஜனநாயக பேரவை பவானி தரப்பில் ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. அதை நீதிபதியும் ஏற்றுக்கொண்டார். இந்த மனு மீதான விசாரணையைதான் இன்று 30-ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
எதிர்பார்ப்பு: அதன்படி, இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில். சவுக்கு சங்கருக்கு ஜாமீன் கிடைக்குமா? என்பதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications