Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாண்டியன் ஹோட்டலில் "அவருடன்" செங்கோட்டையனின் ரகசிய சந்திப்பு? பசும்பொன்னில் புதிய அரசியல் சமிக்ஞை

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு, ஒரே காரில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் பயணம் செய்துள்ளனர்.. பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு இருவரும் ஒன்றாக வந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் பயணம் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பிரபல சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், "ஒரு பெரிய அரசியல் சமிக்ஷையாக இது பார்க்கப்படுகிறது.. சிக்னல் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.. எப்போதுமே இதுபோன்ற பொது விழாக்களை பயன்படுத்தி கொண்டு, எதிர்கால அரசியல் இப்படித்தான் போகிறது என்பதை தலைவர்கள் உணர்த்துவார்கள்..

Pandian Hotel Sengottaian Pasumpon

எடப்பாடி பழனிசாமி

இந்த விஷயத்தை பொறுத்தவரை, செங்கோட்டையனின் நிலைப்பாடு நமக்கு நன்றாகவே தெரியும்.. ஒருங்கிணைந்த அதிமுகவுக்காக முதலில் ஒரு கெடு விதித்தார். குறைந்தபட்சம் அந்த கெடு தேதிக்குள், ஒருங்கிணைப்பு பணிகளையாவது துவங்க வேண்டும் என்று சொன்னார்..

ஓ.பன்னீர்செல்வம், கட்சியிலிருந்தே விலக்கி வைக்கப்பட்டவர்.. அவருக்கு இனி கட்சியில் இடமே இல்லை என்று எடப்பாடி பழனிசாமியும் சொல்லிவிட்டார்.. மேலும், ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகளை பற்றியும் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே குறிப்பிட்டு சொல்லி உள்ளார். இன்னமும்கூட அதிமுக தலைமையை குறித்த வழக்குகளில் மனுதாரர் ஓபிஎஸ்தான்..

பசும்பொன் குரு பூஜை

அப்படியிருக்கும்போது, ஓ.பன்னீர் செல்வத்துடனேயே ஒரே காரில் பயணிப்பதோ அல்லது ஒரே வாகனத்தில் சென்று தேவர் குருபூஜைக்கு சென்று பசும்பொன்னுக்கு மரியாதை
செலுத்துவதோ, அது அரசியல் ரீதியாக அதிமுகவுக்குள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது செங்கோட்டையனுக்கும் நன்றாகவே தெரியும்.

டிடிவி தினகரனை பொறுத்தவரையில், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று சொல்லவேயில்லை.. ஆனால் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ள முடியாது.. அப்படியான கூட்டணியில் நான் நீடிக்க விரும்பவில்லை என்று என்டிஏ கூட்டணியிலிருந்து விலகியதற்கான காரணத்தை சொல்லிவிட்டார்-

பாண்டியன் ஓட்டலில் சந்திப்பு

ஆக, எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியான அரசியல் எதிரிகள் என்று பார்த்தால், டிடிவி, மற்றும் ஓபிஎஸ் ஆவர். உட்கட்சியிலே எதிரி என்று பார்த்தால் செங்கோட்டையன்..

இன்று மூன்று பேருமே ஒரே வாகனத்தில் சென்று குருபூஜையில் மரியாதை செலுத்துகிறார்கள் என்பதே மிகப்பெரிய அரசியல் செய்தியாகும்.. இதற்கான ஒரு சந்திப்பு, ஏற்கனவே பாண்டியன் ஓட்டலில் நடைபெற்றதாகவும், அங்கேயே பேசி முடிவு செய்யப்பட்ட பிறகுதான், இப்படி ஒரே காரில் வந்து பகிரங்கப்படுத்தப்படுவதாகவும் நான் அறிந்தேன்.. அதன் உண்மைத்தன்மை எனக்கு தெரியாது.. மதுரையில் உள்ள நண்பர்கள் அப்படித்தான் எனக்கு சொன்னார்கள்..

செங்கோட்டையனை நீக்கும் எடப்பாடி

எனினும் எடப்பாடி பழனிசாமிக்கு விசுவாசத்தை காட்டும் அதே நேரத்தில், ஒரு குறிப்பிட்ட இனத்தின் பிரதிநிதியாக தான் மட்டுமே இருக்கிறேன் என்பதை காட்டுவதற்காகத்தான் என்று தோன்றுகிறது.

டிடிவி தினகரனோ, தன்னுடைய நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளார்.. தனிக்கட்சியும் வைத்திருக்கிறார்.. இந்த விஷயத்தில் நேற்றைய தினம் சி.டி. நிர்மல்குமார் பேசியதையும் சேர்த்து பார்க்க வேண்டும்.. எனவே விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமையும்பட்சத்தில் அதிமுகவுக்கு மிகப்பெரிய அரசியல் சவால் உள்ளது..

எனினும் அடுத்தடுத்த நாட்களிலே, செங்கோட்டையனை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும்கூட நீக்குவதற்கு எடப்பாடி பழனிசாமி செல்லக்கூடும்.

புது அரசியல் அத்தியாயம்

டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் என இந்த மூவருமே தனித்தனியாக வந்து அதிமுக அல்லது இரட்டை இலைக்கு ஈடுகொடுக்க முடியாது.. ஏனென்றால் இரட்டை இலை என்பது மிகவும் சக்திவாய்ந்த சின்னம்..

எடப்பாடி பழனிசாமிக்கு பின்னால் பாஜக இருப்பது போலத்தான் தெரிகிறது.. அப்படியான சூழலில், இவர்களுக்கும் ஒரு அணி தேவைப்படும்.. அந்த அணி, அநேகமாக விஜய் அணியாக இருக்கலாம்.. காரணம், விஜய்க்கான ஆதரவு கருத்துக்களை ஓபிஎஸ்ஸும் தொடர்ந்து சொல்லி வருகிறார்.

எனவே அடுத்தடுத்த மாதங்களில் மிகப்பெரிய அரசியல் மாற்றங்களை கொண்டுவரக்கூடிய பயணம் என்றுதான் இன்றைய நிகழ்வை பார்க்கிறேன். குருபூஜையில் புதிய அரசியல் அத்தியாயம் எழுதப்பட்டு வருகிறது.. இப்போது மறைபொருளாக தென்படுவது, போகப் போக வெளிப்படையாகவே வெளிப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+