Seeman: சீமான் பற்றி அவதூறு பேசினால் நடவடிக்கை இல்லையா? நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது! ஹைகோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதவர் விஜய் குறித்து அவதூறு பேசினால் உடனே நடவடிக்கை எடுக்குறீர்கள்.. ஆனால் சீமான் மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை இல்லையா?.. நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது.. என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இன்றைக்குள் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை நீக்கி வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட சைபர் கிரைம் ஆய்வாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், தேர்தலில் வெற்றி தோல்வி என்பது அப்பாற்பட்டது. ஆனால் தமிழக அரசியலில் சீமான் ஒரு தவிர்க்க முடியாத தலைவர் எனவும் மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதி குறிப்பிட்டார்.

Seeman No action taken for spreading slander against Seeman Madurai Bench of the High Court questions

சீமான் மீது அவதூறு பரப்புவதாக

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து யூடியூபர் பிஸ்மி உள்ளிட்டோர் அவதூறு பரப்பி வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறினாலும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் தீரன் திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது;-

யூடியூபரும், திரைப்பட விமர்சகருமான பிஸ்மி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க ஸ்டாலினிடம் இருந்து ரூ.100 கோடி பெற்றதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது பற்றி விசாரித்தால் அவர் இதே போன்று பல முறை அவதூறு பரப்பி வருவது தெரியவந்தது.

விஜய் குறித்து பேசினால் மட்டும் நடவடிக்கையா?

இது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. வழக்கு பதிவும் செய்யப்பட வில்லை. எனவே சீமான் மீது அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை கூறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி விக்டோரியா கவுரி, "தேர்தலில் வெற்றி தோல்வி என்பது அப்பாற்பட்டது. ஆனால் தமிழக அரசியலில் சீமான் ஒரு தவிக்க முடியாத தலைவர்.." என குறிப்பிட்டார். மேலும், திமுகவை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ முதல்வர் விஜய் குறித்து பேசியதும் நடவடிக்கை எடுக்குறீர்கள். ஆனால் இந்த வழக்கில் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது

அதே போன்று மனுதாரர் தரப்பில், பழனி கோயில் நிலம் தொடர்பாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தொடர்பாக யூடியூபில் வீடியோ பதிவிட்டவர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் ஏன் சீமான் குறித்து அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்க தவறுகின்றனர் என தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதி, ஏன் சீமான் விவகாரத்தில் மட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது போன்ற விஷயங்களை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது.

இன்றைக்குள்ளாவது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை நீக்கி இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அது குறித்த அறிக்கையை நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மதுரை மாவட்ட சைபர் கிரைம் ஆய்வாளருக்கு உத்தரவிட்டு, வழக்கை தள்ளி வைத்து உத்தரவு பிறப்பித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+