எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்த அதிமுக Ex அமைச்சர்கள்! அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!
மதுரை: மதுரை வந்திருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பொன்னாடை அணிவித்து வரவேற்ற முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜுவும், ஆர்.பி.உதயகுமாரும் அவரது காலில் விழுந்து வணங்கினர்.
இதனை எடப்பாடி பழனிசாமியே சற்றும் எதிர்பார்க்கவில்லை. காலில் விழுந்து வணங்கியவர்களை காலில் விழ வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி தடுப்பார் என்று பார்த்தால் அவர் அது போல் செய்யவில்லை.

இதனிடையே ஏற்கனவே சமுதாய அமைப்பினர் சிலர் செல்லூர் ராஜூ மீதும் ஆர்.பி.உதயகுமார் மீதும் கடும் கோபத்தில் உள்ள நிலையில் இன்றைய நிகழ்வு அவர்களை மேலும் கோபப்படுத்தியிருக்கிறது. காலில் விழும் கலாச்சாரத்தை எடப்பாடி பழனிசாமி ஒழிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அது போல் செய்யவில்லை.
எடப்பாடி பழனிசாமிக்கும், செல்லூர் ராஜுவுக்கும் பெரியளவில் வயது வித்தியாசமில்லை. அப்படியிருந்தும் செல்லூர் ராஜூ எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்திருப்பது விமர்சனங்களை தேடிக் கொடுத்திருக்கிறது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜுவும், ஆர்.பி.உதயகுமாரும் கண்டு கொள்ளவில்லை.
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்ற நடிகர் கவுண்டமணியின் வசனத்தை போல் தங்கள் மீதான விமர்சனங்களை பொருட்படுத்தவில்லை. இதனிடையே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசணம் செய்த எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள கொடிமரம் அருகே அதிமுக நிர்வாகிகளோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக தான் எடப்பாடி பழனிசாமி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை புரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications