திருப்பரங்குன்றத்தில் போலீஸாரின் தடுப்புகளை உடைத்து இந்து முன்னணி ஆவேசம்! அடுத்தது என்ன?
மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்ததுபடி மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை என்பதை கண்டித்து இந்து முன்னணி, பாஜகவினர் திரண்டு வந்து போலீஸார் வைத்திருந்த தடுப்புகளை உடைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் 4ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

தீபத் திருநாளின் போது வழக்கம் போல் உச்சிப்பிள்ளையார் கோயில் முன்புதான் தீபம் ஏற்றுவது வழக்கம். இந்த நிலையில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
இதையொட்டி நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற நெய், திரி போன்றவற்றை பிற்பகல் 3.30 மணிக்கு கோயில் பணியாளர்கள் மலை உச்சிக்கு கொண்டு சென்றனர்.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் தலைமையில் அக்கட்சியினர் திரண்டு மாலை 5 மணியளவில் 16 கால் மண்டபம் முன்பு அமர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடினர். தீபத் தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டதை அடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
மாலை 6 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாலதீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து உச்சி பிள்ளையார் கோவில் முன்புள்ள தீபத்தூணில்தான் மகா தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவின்படி மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.
இதை அறிந்த இந்து முன்னணியினர், பாஜகவினர் திரண்டு போலீஸாரின் தடைகளை உடைத்துக் கொண்டு 16 கால் மண்டபம் வரை வந்தனர். அங்கு அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீஸாருக்கும் இந்து முன்னணியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டது. எனினும் இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தடையை மீறி போராட்டம் நடத்திய இந்து அமைப்பினரை போலீஸார் குண்டுகட்டாக கைது செய்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications