தை பொங்கல் திருவிழா 2021: ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள் - நெருங்க முடியுமா
தமிழர் திருநாளாம் தைத்திருநாளை வரவேற்க திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தயாராகும் வகையில் காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன.
மதுரை: தமிழர் திருநாளாம் தைத்திருநாளை வரவேற்க திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தயாராகும் வகையில் காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க பருத்தி விதை, நாட்டுக்கோழி முட்டை ,கம்பு, மக்காச்சோளம் மற்றும் திணை அரிசி உணவு வகைகளாக வழங்குகின்றனர் இதனால் மாடுகள் நன்றாக தசைபிடிப்புகளுடன் பொலிவான தோற்றத்தில் காணப்படும்.
தை திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் உலகப் புகழ்பெற்ற பாலமேடு , அலங்காநல்லூர் பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். திருப்பரங்குன்றம் தாலுகா பகுதியில் உள்ள அவனியாபுரத்தில் தை முதல் நாளான பொங்கல் நாளன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.

இந்த ஆண்டு தை பொங்கல் திருநாள் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு ஏதுவாக காளைகள் வளர்ப்போர் தங்கள் மாடுகளை பயிற்சி அளித்து வருகின்றனர். இதற்காக மண்முட்டுதல் பயிற்சி அளிக்கின்றனர். மணல்மேடுகள் குவியலாக வைத்து அதில் மாடுகள் கொம்புகளால் குத்தி பயிற்சி அளிக்கின்றனர்.
தன்னை பிடிக்க வரும் மாடுபிடி வீரர்களை குத்தி தூக்கி எறிவதற்கு அளிக்கும் பயிற்சியாக உள்ளது. மேலும் நீண்ட நேரம் ஜல்லிக்கட்டு களத்தில் நிற்பதற்காக நீச்சல் பயிற்சி அளிக்கின்றனர்.
இதேபோல் நீண்ட நேரம் நடை பயிற்சி உள்ளிட்டவை அளிக்கின்றனர். இதனால் ஜல்லிக்கட்டு காளைகள் உடல் பலத்துடன் திடகாத்திரமாக ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் களத்தில் நின்று மாடுபிடி வீரர்களை திணறடிக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய பயிற்சி அளிக்கப்படுகிறது .
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க பருத்தி விதை, நாட்டுக்கோழி முட்டை ,கம்பு, மக்காச்சோளம் மற்றும் திணை அரிசி உணவு வகைகளாக வழங்குகின்றனர் இதனால் மாடுகள் நன்றாக தசைபிடிப்புகளுடன் பொலிவான தோற்றத்தில் காணப்படும். தினமும் திடகாத்திரமான ஜல்லிக்கட்டு காளைக்கு தினசரியும் 700 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை செலவு செய்கின்றனர்.
போட்டிகளில் ஜல்லிக்கட்டு காளைகள் பிடிபடாமல் வென்று பரிசு பெற்றால் ஒரு ஜல்லிக்கட்டு காளை ஒன்றரை லட்சம் முதல் 5 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகள் தயாராவது போல மாடு பிடி வீரர்களும் காளைகளை அடக்க உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications