பட்டின பிரவேச தடைக்கு எதிராக ஒன்றாக இணைந்த சைவம்-வைணவம்.. மதுரை ஆதீனம் பெருமிதம்
மதுரை: பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை எனது கோரிக்கையை ஏற்று தமிழக அரசு விலக்கி உள்ளது. இந்த விஷயத்தில் அரசு மனம் மாறியது மகிழ்ச்சி'' என மதுரை ஆதீனம் ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கூறினார்.
தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டின பிரவேசம் விழாவில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது.
இதற்கு இந்து அமைப்பினர், ஆன்மீகவாதிகள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள ஆதீனங்கள் குரல் கொடுக்க துவங்கினர்.

மதுரை ஆதீனம்
மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்,"தருமபுர ஆதீன மடத்துக்கு ஆளுநர் வருகை தந்ததுதான் பட்டினப் பிரவேச நிகழ்ச்சி ரத்தானதுக்கு காரணம். உயிரைக் கொடுத்தாவது தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம். பட்டினப் பிரவேச நிகழ்வை நடத்த அரசு அனுமதி கொடுக்க வேண்டும். தருமபுரம் பட்டினப் பிரவேசத்தை முதல்வரே நேரில் வந்து தலைமை தாங்கி நடத்த வேண்டும். உயிரே போனாலும் பரவாயில்லை. நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பேன்." எனக் கூறினார்.

மிரட்டல் குற்றச்சாட்டு
மேலும் தஞ்சாவூர் களிமேட்டில் பேசும்போது, ‛தருமபுரம் பட்டின பிரவேசம் நடைபெறும் என அறிவித்ததால் உன்னால் திருப்பணி செய்ய முடியுமா என ஆளுங்கட்சியினர் மிரட்டியதாகவும். உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பிரதமர் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து புகார் அளிக்க உள்ளதாகவும் கூறினார்' மேலும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்க கோரியும் மனு அளிக்கப்பட்டது.

தடை நீக்கம்
இந்நிலையில் தான் தருமபுரம் ஆதீனம் பட்டினப்பிரவேச நிகழ்ச்சியில் பல்லக்கு தூக்க விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு நீக்கியுள்ளது. இதற்கு ஆதீனங்கள், பாஜகவினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மதுரை ஆதீனமும் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி இன்று மதுரை ஆதீனம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

வரவேற்பு
பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சி காலம் காலமாக நடைபெற்று வருகிறது. திருஞானசம்பந்தரின் பல்லக்கை திருநாவுக்கரசர் சுமந்துள்ளார். 500 ஆண்டுகளாக நிகழ்ச்சி நடக்கிறது. 7 ம் நூற்றாண்டிலும் நடந்துள்ளது. பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு தடை விதித்து இருக்க கூடாது. மறை நிந்தனை, சைவ நிந்தனை செய்பவர்களை எதிர்ப்போம். இருப்பினும் எனது கோரிக்கையை ஏற்று அரசு விதித்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதை வரவேற்கிறேன். பாராட்டுகிறேன்.

மகிழ்ச்சி
பல்லக்கு தடை உத்தரவு தொடர்பான நிகழ்வுகள் நடந்தது நடந்துவிட்டது. அரசு மனம் மாறியது மகிழ்ச்சி. இந்த விஷயத்தில் ஜீயரை(மன்னார்குடி ஜீயர்) பாராட்டுகிறேன். மேலும் சைவ, வைணவம் ஒன்றுபட்டுள்ளது. ஜீயர் இனி(அரசியல்வாதிகள் சுதந்திரமாக நடமாடமுடியாது) அதுபோன்று பேசமாட்டார். நான் எந்த கட்சிகளுக்கும் ஆதரவு, பிரசாரம் செய்வது இல்லை.
Recommended Video

மத்திய அரசு வழங்கும்
பல்லக்கு தடை விஷயத்தில் எதிர்க்கட்சி தலைவர் நல்ல கருத்தை கூறினார். எனக்கான மிரட்டல் குறித்து போலீசில் புகார் அளித்தோம். இந்த விஷயத்தில் மத்திய அரசு பாதுகாப்பு வழங்கும். இல்லாவிட்டால் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து பாதுகாப்பு வழங்கும். மேலும் மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் கூறியுள்ளார். இது நம்பிக்கையளிக்கிறது. கொரோனா காரணமா ஏழை, எளிய மக்களுக்கான தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications