சுப்ரீம்கோர்ட் சொன்னது நல்ல அட்வைஸ்தான்.. கார்த்தி சிதம்பரம் அசால்ட்!
Recommended Video
மதுரை: உச்ச நீதிமன்றம் சிவகங்கை மீது கவனம் செலுத்துங்கள் எனக் கூறிய கருத்துக்கு கார்த்தி சிதம்பரம் பதில் அளித்துள்ளார்.
வெளிநாடு செல்ல பிணைத் தொகையாக செலுத்திய 10 கோடி ரூபாயை திருப்பி அளிக்க வேண்டும் என்ற கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், தொகுதியை கவனிக்கும்படி அவருக்கு அறிவுரை வழங்கியது.

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் உச்சநீதிமன்றம் சிவகங்கை தொகுதி மீது கவனம் செலுத்துங்கள் என அறிவுறுத்தியது தொடர்பான கேள்விக்கு உச்ச நீதிமன்றத்தின் அறிவுரை நல்ல அறிவுரைதான், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி மீது கவனம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்துவது நல்ல அறிவுரைதான்.
ஆனால் நீதிமன்றத்தின் அறிவுரை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தொடர வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனைவரின் நோக்கம். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கிற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இந்தியாவில் நாளை அமையவுள்ள புதிய அரசு அனைவருக்கும் பொதுவான அரசாக இருக்கும் என நம்பிக்கை உள்ளது.
தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி பாகுபாடின்றி தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுத்து உரிமையை பெறுவோம். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம்தான். வடநாடுகளில் குறிப்பாக ஹிந்தி பேசும் மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியடைந்ததற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. காங்கிரஸ் வெற்றி தோல்விகளை சந்தித்த கட்சி என்பதால் தோல்வியிலிருந்து காங்கிரஸ் மீண்டும் எழுந்து வரும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications