தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்.. திருப்பரங்குன்றம் ஊர் பொதுமக்கள் சார்பாக உண்ணாவிரத போராட்டம்
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, திருப்பரங்குன்றத்தில் உள்ளூர் மக்கள் சார்பாக இன்று உண்ணாவிரத போரட்டம் தொடங்கியுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பரங்குன்றம் மயில் மண்டபம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. உண்ணாவிரத போராட்டம் நடக்கும் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி உண்ணாவிரதம் இருக்க அனுமதித்து மதுரை உயர் நீதிமன்ற கிளை நேற்று அனுமதி அளித்த நிலையில், இன்று ஊர்மக்கள் சார்பாக உண்னாவிரத போராட்டம் தொடங்கியுள்ளது. முன்னதாக இந்த போராட்டத்திற்கு போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபு, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தார்.

தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை
இதில், மதுரை திருப்பரங்குன்றம் மலை வரலாறு மிகவும் பழமையானது. திருமுருகாற்றுப்படை, பரிபாடல், அகநானூறு, மதுரைக்காஞ்சி, கலித்தொகை, தேவாரம் உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோவில், குகைக்கோவிலாக பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததை உறுதிப்படுத்துகின்றன.
எனவே திருப்பரங்குன்றம் முருகன் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பது உறுதியாகிறது. 1926-ம் ஆண்டு இங்கு சிவில் பிரச்சினை எழும் வரை அந்த மலையின் மீது உள்ள தீபத்தூண் பகுதியிலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது. அந்த நடைமுறையை பின்பற்றி இந்த ஆண்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவை பின்பற்றி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
#WATCH | Madurai, Tamil Nadu: Villagers of Thiruparankundram stage hunger strike, demanding that the deepam should be lit atop the Thiruparankundram hill. pic.twitter.com/tDZR74uFBy
— ANI (@ANI) December 13, 2025
உண்ணாவிரத போராட்டம்
எனவே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபத்தை ஏற்ற வலியுறுத்தி அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த முடிவு செய்து, இதற்காக அனுமதி கேட்டோம். ஆனால் போலீசார் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். இது ஏற்கத்தக்கதல்ல. எனவே வருகிற 13 ஆம் தேதி (இன்று) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பரங்குன்றம் மயில் மண்டபம் அருகே அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசரித்த நீதிமன்றம், மனுதாரர் கோரும் இடத்திலேயே 50 பேர் மட்டும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ளலாம். தனி நபர்களையோ, அரசியல் கட்சியினரையோ தாக்கும் வகையில் பேசக்கூடாது. கட்சி கொடிகளை பயன்படுத்தக்கூடாது.
50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு
ஒரேயொரு மைக் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது" என்று உத்தரவிட்டது. இந்த நிலையில் உயர் நீதிமன்ற நிபந்தனைகளின் படி, இன்று திருப்பரங்குன்றத்தில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளது. இந்து முன்னணி அமைப்பு மற்றும் அப்பகுதி மக்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கோஷங்கள் எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால் பதாகைகள் ஏந்தியபடி உண்ணாவிரத போராட்டம் செய்து வருகிறார்கள்.
உண்ணாவிரத போராட்டம் நடக்கும் பகுதியில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்துவிட கூடாது என்பதற்காக அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 50 பேருக்கு மட்டுமே உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் வேறு யாரும் உள்ளே வந்துவிடாமல் இருப்பதையும் கண்காணித்து வருகிறார்கள்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications