28.06 லட்சம் பேருக்கு வேக்சின்.. மக்களின் ஆர்வம்தான் இதற்கு காரணம்.. அமைச்சர் மா.சு பாராட்டு!
மதுரை: மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் பொதுமக்கள் சாரை சாரையாக வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தடுப்பூசி மெகா முகாம்கள் மிகச்சிறப்பாக வெற்றி அடைய எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்த அனைத்து துறை அலுவலர்களும் சுகாதாரத் துறை அலுவலர்களுக்கும் நன்றி. அவர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றினர். இந்த முகாம் வெற்றி அடைய எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்தார்கள்.

தூத்துக்குடி நெல்லை தென்காசி விருதுநகர் மதுரை என பல்வேறு மாவட்டங்களில் நாங்கள் நேரடியாக சென்று முகாம் நடைபெறும் இடங்களை ஆய்வு செய்தோம் அதில் மக்கள் விறுவிறுப்பாக வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதற்கு பொதுமக்கள் இடையே ஏற்பட்ட ஆர்வம்தான் காரணம். தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் மையங்களில் 20 லட்சம் என்ற இலக்கை நிர்ணயித்து செயல்பட்டோம். முதல்வர் கடந்த ஒரு வாரமாக ஆலோசனைகள் கூறிய வழிகாட்டுதலின்படி செயல்பட்டோம்
ஆனால் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை இருபத்தி ஆறு லட்சத்து 11 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் இது ஒரு மிகப்பெரிய சாதனை.இதுவரை 3 லட்சத்து 74 ஆயிரம் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் இன்று நடந்த சிறப்பு முகாம் மூலம் 26 ஆயிரத்து 11,000 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதில் மொத்தம் 4 லட்சத்து 11 ஆயிரம் பேர் என்ற இலக்கை எட்டியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 754 மாவட்டங்களில் 100 சதவித தடுப்பூசி போட்ட மாவட்டம் என்ற இலக்கை தமிழகத்தில் உள்ள உதகை முதலிடம் பிடித்துள்ளது.
மக்கள் தன்னார்வமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்தனர் சில இடங்களில் ஒன்றிய அரசிடமிருந்து கிடைக்கப்பட்ட தடுப்பூசி மருந்துகளை அந்தந்த முகாம்களுக்கு அனுப்பி வைத்தோம் கூடுதலாக வந்தவர்கள் நாளை தடுப்பூசி போட்டுக்கொள்ள பணியாளர்களை அறிவுறுத்தியுள்ளோம் மலை கிராம பகுதிகளான தர்மபுரி கிருஷ்ணகிரி பகுதிகளில் மக்கள் தன்னார்வம் இல்லை. அப்பகுதிகளில் தன்னார்வமாக செயல்பட முகாம்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வுபடுத்த அறிவுறுத்தியுள்ளோம்
நீட் தேர்வு தொடர்பாக நாங்கள் தேர்தல் அறிக்கையிலேயே வெளிப்படையாக கூறி இருக்கிறோம். நீட் தேர்வு குறித்து மக்கள் கருத்துக்களை பெற ஏ கே ராஜன் தலைமையில் குழு அமைத்து அவர்கள் ஆய்வு செய்து அறிக்கை கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் சட்டமன்றத்தில் நாளை தீர்மானம் நிறைவேற்றி அதனை குடியரசு தலைவருக்கு அனுப்பி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க இருக்கிறோம்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications