தவெகவில் இணைகிறேனா? அரசியல் ஆசை குறித்து ஓபனாக சொன்ன TTF வாசன்!
மதுரை: தவெகவில் இணைவது போன்ற எந்த அரசியல் ஆசையும் இப்போது இல்லை என்று நடிகர் டிடிஎஃப் வாசன் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய் பேசிக் கொண்டிருந்த போது டிடிஎஃப் வாசன், தவெகவுக்கு நன்கொடை அனுப்புவதாக நினைத்து தனியார் செய்தியின் யூடியூப் பக்கத்திற்கு நன்கொடை அளித்தார்.
இயக்குநர் கருணாநிதி இயக்கத்தில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ஐபிஎல். அரசியல் பின்னணியில் நடக்கும் த்ரில்லர் படமாக அமைந்துள்ளது. இதில் டிடிஎஃப் வாசன் மட்டுமல்லாமல் நடிகர்கள் கிஷோர், அபிராமி மற்றும் போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக எந்தவித சர்ச்சைகளிலும் டிடிஎஃப் வாசன் சிக்காமல் அமைதியாக இருந்து வந்தார்.

அண்மையில் நீண்ட நாள் காதலியை திருமணம் செய்த டிடிஎஃப் வாசன், சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இப்போதெல்லாம் டிடிஎஃப் வாசன் பைக்கில் எந்தவித சாகசங்களையும் செய்வதில்லை என்று கூறப்படுகிறது. ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டதில் இருந்தே அவர், சர்ச்சைகளில் சிக்கக் கூடாது என்று கவனமாக இருந்தார்.
யூடியூப்பில் அடைந்த புகழ் காரணமாக இளைஞர்கள் பலரும் டிடிஎஃப் வாசனை பின் தொடர்ந்து வருகின்றனர். இதனிடையே ஐபிஎல் படத்தின் விளம்பரப் பணிகளுக்காக மதுரை வந்த டிடிஎஃப் வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தவெகவில் இணைய வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு டிடிஎஃப் வாசன், எனக்கு வயது 25 மட்டுமே ஆகிறது.. அரசியல் பேசும் அளவிற்கு இன்னும் வளரவில்லை.. இப்போதுதான் சினிமாவில் வளர்ந்து கொண்டே இருக்கிறோம். அடுத்தடுத்து படங்கள் வந்துகொண்டே இருக்கிறது.. மதுரை ஒன்றரை ஆண்டுகளாக என்னுடைய கார் கஸ்டடியில் இருக்கிறது. ஒரு ஃபோனில் பேசியதற்கு இவ்வளவு செய்வது அநியாயம் என்றே சொல்வேன்.
இன்னும் அதற்காக இஎம்ஐ கட்டிக் கொண்டே இருக்கிறேன். என்னுடைய விஷயத்தில் பயன்படுத்தாத காருக்கு மாதம் ரூ.30 ஆயிரம் இஎம்ஐ கட்டிக் கொண்டு இருக்கிறேன். அதனை நினைத்தால் வருத்தமாக உள்ளது.. விரைவாக யாராவது மீட்டுக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
-
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன?












Click it and Unblock the Notifications