மதுரை வரும் அமித் ஷா.. சந்திக்க காத்திருக்கும் ஓபிஎஸ்? பிடி கொடுக்காத பாஜக நிர்வாகிகள்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜகவின் தேர்தல் பணிகள் ஆலோசனைக்காக இன்று மதுரை வரும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வன் உடனான சந்திப்பு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தென் மாவட்டங்களை மையப்படுத்தி பாஜக காய்களை நகர்த்தி வரும் சூழலில், ஓபிஎஸ் உடன் கூட்டணி அமைப்பது அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அந்த வகையில் பாஜகவும் தமிழ்நாடு பக்கம் கவனத்தை திருப்பி இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் சென்னை வந்த மத்திய உள்துறை அமித் ஷா, அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்து அறிவித்தார்.

Union Minister Amit Shah s Madurai Visit Triggers OPS Meeting Speculation

என்டிஏ கூட்டணி

அப்போது அமித் ஷா சென்னை வந்த போது, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரை சந்திக்கவில்லை. அந்த நேரத்தில் டிடிவி தினகரன் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதன்பின் பாஜகவினர் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் என்டிஏ கூட்டணியில் தொடர்வதாக கூறி வருகின்றனர்.

அமைதி காக்கும் அதிமுக

ஆனால் தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணிக்கு தலைமை வகிக்கும் எடப்பாடி பழனிசாமியோ அல்லது அதிமுக நிர்வாகிகளோ இதுதொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதனால் அமமுக மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோரின் ஆதரவாளர்களுக்கு பாஜக உடன் கூட்டணியில் இருக்கிறோமா என்பதில் சந்தேகமாக இருக்கின்றனர்.

மதுரை வரும் அமித் ஷா

இந்த நிலையில் தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மதுரை வருகிறார். இதற்காக பாஜக சார்பாக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிகளில் சுமார் ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று இரவு மதுரை வரும் அமித் ஷா, நாளை பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

ஓபிஎஸ் சந்திப்பு?

அதேபோல் மாலையில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். அதற்கு இடையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமித் ஷாவை சந்திக்க ஓபிஎஸ் தரப்பில் நேரம் கேட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் பாஜக தரப்பில் இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை.

பிடிகொடுக்காத பாஜக

கடந்த முறையே அமித் ஷா சந்திக்காமல் சென்றது வருத்தம் அளிக்கிறது என்று ஓபிஎஸ் கூறி இருந்தார். இந்த பயணத்திலும் ஓபிஎஸை சந்திக்காமல் அமித் ஷா புறப்பட்டால், என்டிஏ கூட்டணியில் ஓபிஎஸ் இல்லை என்றே புரிந்து கொள்ள முடியும். இதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இந்த சந்திப்பு நடக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+