• search

இதான் செம ட்விஸ்ட்.. சர்கார் திரைப்படத்தின் அந்த கருத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் ஆதரவு!

FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    மதுரை: சர்கார் திரைப்படம் அதிமுக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகளை சம்பாதித்து வரும் நிலையில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், அத்திரைப்படம் வலியுறுத்தும் ஒரு காட்சியை உண்மை என்று தெரிவித்துள்ளார்.

    மதுரையில், இன்று செய்தியாளர்களை சந்தித்தார், பொன்.ராதாகிருஷ்ணன். அப்போது, சர்கார் திரைப்படத்தில், தமிழக அரசு வழங்கிய இலவச பொருட்களை எரிப்பது போன்ற காட்சி உள்ளதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதுகுறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதை பாருங்கள்.

    இப்படியா பட்டாசு கொளுத்தறது.. தலைதெறிக்க ஓடிய மக்கள்.. பரபரப்பு வீடியோ

    இலவச பொருட்கள் எங்கே உள்ளது

    இலவச பொருட்கள் எங்கே உள்ளது

    சர்கார் திரைப்படம் நான் பார்க்கவில்லை. இதற்கு முன்னாடி இலவசங்கள் கொடுக்கப்பட்டதெல்லாம் எங்கே உள்ளது என்பது பொது மக்களுக்கும் தெரியும். அந்த வியாபாரம் செய்ய கூடியவர்களுக்கும் தெரியும். (இரும்பு கடைகளுக்கு போடப்பட்டதாக கூறப்படுவதை பொன்.ராதாகிருஷ்ணன் மறைமுகமாக சொல்கிறார்).

    படமே பார்ப்பதில்லை

    படமே பார்ப்பதில்லை

    நான் திரைப்படத்தை பார்க்கவில்லை என்பதால் அதிகமாக கருத்து சொல்ல விரும்பவில்லை. திரைப்படத்தில் உள்ளவை பொய்யாக இருந்தால் அதை ஏற்க முடியாது. நான் திரைப்படங்கள் பார்த்து வருடக் கணக்காகிவிட்டது என்றார்.

    தேவர் மகன் நல்லா இருந்ததே

    தேவர் மகன் நல்லா இருந்ததே

    தேவர் மகன்2 என்ற பெயரில் படம் எடுக்க கூடாது என்று டாக்டர்.கிருஷ்ணசாமி கூறிய கருத்து பற்றி நிருபர்கள் கேட்டபோது, தேவர் மகன் திரைப்படம் நான் பார்த்துள்ளேன். எனக்கு தெரிந்து அந்த படத்தில் பெரிய தவறு இருந்ததாக தெரியவில்லை. டாக்டர்.கிருஷ்ணசாமி எதை குறிப்பிட்டு சொன்னார் என தெரியவில்லை.

    சிறுமை செய்ய கூடாது

    சிறுமை செய்ய கூடாது

    எல்லா ஜாதிகளுக்கும் தங்களை பெருமைப்படுத்தி கொள்ள முழு உரிமை உள்ளது. ஆனால் எந்த ஒரு ஜாதிக்கும் பிற ஜாதியை சிறுமைப்படுத்த உரிமை கிடையாது என்பதுதான் எனது கருத்து. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

    English summary
    Union Minister, Pon.RadhaKrishnan says, Freebies is going to scrap vendors, while asking about Sarkar.

    நாள் முழுவதும் oneindia
    செய்திகளை உடனுக்குடன் பெற

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more