மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உங்களின் பொன்னான வாக்குளை பதிக்க... பாதுகாப்போடு புறப்பட்டன வாக்கு இயந்திரங்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளன-வீடியோ

    மதுரை: மதுரை மாவட்டத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

    மதுரை மாவட்டத்தில் மதுரை, தேனி, விருதுநகர் ஆகிய 3 மக்களவை தொகுதிகளும் வருகிறது. ஒட்டுமொத்தமாக மதுரை மாவட்டத்தில் சுமார் 28 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

    இதில் மதுரை மக்களவை தொகுதியில் மட்டும் சுமார் 15லட்சத்து 38ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதுதவிர விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் மற்றும திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் மட்டும் சுமார் 5 லட்சத்து 71 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதேபோல் தேனி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டி, சோழவந்தான் பகுதியில் மட்டும் சுமார் 4 லட்சத்து 85 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

    டிஜிட்டல் இந்தியா.. டிஜிட்டல் இந்தியாதான்யா.. கழுதை & குதிரை மேல் கொண்டு செல்லப்பட்ட ஈவிஎம்கள்! டிஜிட்டல் இந்தியா.. டிஜிட்டல் இந்தியாதான்யா.. கழுதை & குதிரை மேல் கொண்டு செல்லப்பட்ட ஈவிஎம்கள்!

     5438 வாக்கு எந்திரங்கள்

    5438 வாக்கு எந்திரங்கள்

    மதுரை மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடக்க 2719 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சிறப்பான முறையில் வாக்குப்பதிவு நடப்பதற்காக, 5438 வாக்குபதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மதுரையில் தற்போது 1549 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் தணிக்கை இயந்திரங்கள் கூடுதலாக வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதவின் மீது வாக்கு இயந்திரங்களில் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில், அவற்றை சமாளிக்க கூடுதலாக உள்ள இந்த 20 சதவீத எந்திரங்கள் உதவும்.

    6500 போலீசார் பாதுகாப்பு

    6500 போலீசார் பாதுகாப்பு

    மதுரை மாவட்டத்தில் 13,533 வாக்கு சாவடி அலுவலர்கள் பணியாற்ற உள்னர். மதுரை மாவட்டத்தில் 792 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 2500 போலீசார், துணை ராணுவத்தினர் உள்பட 6500 போலீசார் ஈடுபட உள்ளார்கள்.

    மாசி வீதிகளில் வாக்குச்சாவடி

    மாசி வீதிகளில் வாக்குச்சாவடி

    மதுரை மக்களவை தொகுதிக்கு மட்டும் இரவு 8 மணி வரை வாக்கு பதிவு நடைபெறும். தேரோட்டம் நடைபெறவுள்ள 4மாசிவீதிகளில் உள்ள 4 மாசி வீதிகளில் 53 வாக்குச்சாவடிகளும், கள்ளழகர் எதிர்சேவை நடைபெறக்கூடிய புதூர், மூன்றுமாவடி, சூர்யாநகர் 59 வாக்குச்சாவடிகளும் உள்ளன. மாவட்டம் முழுவதிலும் வாக்குபதிவை கண்காணிக்க நுண்பார்வையாளர் ( Micro Observer) 292பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஜி.பி.எஸ் கருவி

    ஜி.பி.எஸ் கருவி

    மதுரை மாவட்டத்தில் 800க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்படும் . மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியாற்ற 269 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது, இவர்களுக்கான 269 வாகனங்களுக்கு ஜி.பி.எஸ் கருவி பொருத்துப்பட்டுள்ளது. இதுதவிர வாக்கு பதிவு இயந்திரங்களை எடுத்து செல்லும் வாகனங்களிலும் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

    English summary
    5438 voting machine send to 2719 voting booth with full security at madurai district
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X