அனுமதிக்க முடியாது "We will face the consequences" என துணிச்சலாக சொன்ன போலீஸ்! கைகொடுத்த சட்டம் 163
சென்னை: நேற்று CISF வீரர்களை அழைத்துக்கொண்டு பல்வேறு இந்து அமைப்பினர் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வந்தனர். ஆனால் அவர்களை அனுமதிக்காத போலீஸ் அதிகாரிகள் We're not allowing...We'll face the consequences என்று குறிப்பிட்டனர்.
அதாவது நாங்கள் உங்களை அனுமதிக்க மாட்டோம்.. அதனால் வரப்போகும் பின்விளைவுகளை நாங்கள் எதிர்கொள்வோம் என்று துணிச்சலாக குறிப்பிட்டு உள்ளனர். இதற்காக சட்ட பிரிவு 163ஐ பயன்படுத்தி உள்ளனர். அதாவது ஏற்கனவே அங்கே 144 தடை சட்டம் அமலில் உள்ளது. அதனுடன் இந்த 163 தடை பிரிவை போலீசார் பயன்படுத்தி உள்ளனர்.

அது என்ன 163 சட்ட பிரிவு?
பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் (BNSS) பிரிவு 163, பொது ஒழுங்கிற்கு தீங்கு விளைவித்தல், தொந்தரவு செய்தல் அல்லது மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைத் தடுக்க பயன்படுத்தப்படும் சட்டம் ஆகும். அவசரகால பிரச்சனை, மோதல் அல்லது ஆபத்து வழக்குகளில் உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரத்தை மேஜிஸ்டிரேட்டுக்கு வழங்கும் ஒரு விதியாகும். இதில் ஊரடங்கு உத்தரவுகளை விதித்தல், பொதுக் கூட்டங்களை கட்டுப்படுத்துதல் மற்றும் பொதுப் பாதுகாப்பிற்காக குறிப்பிட்ட நடவடிக்கைகளை கட்டாயப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
இதன் மூலம் ஒரு ஆட்சியர் கூட்டம் கூடுவதை, மக்கள் ஒன்றாக செல்வதை, போராட்டம் செய்வதை தடுக்க முடியும். இது ஒரு அவசர சட்ட பிரிவு ஆகும். நேற்று CISF வீரர்களுடன் மனுதாரர்கள் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்ற அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கே கலவரம் வெடிக்கும் சூழல் இருந்தது.
இதனால் மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக எழுந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனையின் காரணமாக பின்வரும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடையே சட்டம் ஒழுங்கினை பேணுவதற்கு ஏதுவாகவும், பொதுமக்கள் பாதுகாப்பு, பொது அமைதி ஆகியவற்றை கருதியும் திருப்பரங்குன்றம் மலையின் மீது ஏறுவதற்கும் திருக்கோயிலின் பகுதியில் கூடுவதற்கும் சட்டப்பிரிவு 163 BNSS- கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருப்பரங்குன்றம் பகுதியில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இருப்பினும் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்ற நிகழ்வுகள் விளையாட்டு போட்டிகள், திருமணங்கள், இறுதி ஊர்வலங்கள், மத விழாக்கள் அரசு விழாக்கள் ஆகியவற்றிற்கு இந்த உத்தரவு பொருந்தாது, என்று குறிப்பிட்டார்.
போலீஸ் ஆக்சன்
திருப்பரங்குன்றம் கோயிலுக்கு செல்ல CISF வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. திருப்பரங்குன்றத்தில் பதற்றம் நிலவும் நிலையில் தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா அங்கே முகாமிட்டு உள்ளார்.
நேற்று திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே, எப்போதும் போல கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டும் எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை என தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு மனுதாரர் ராம ரவிக்குமார் முறையீடு விசாரிக்கப்பட்டது. தீபத்தூணில் விளக்கு ஏற்றாத காரணத்தால் பதற்றம் ஏற்பட்டது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரி, திரண்டிருந்த இந்து முன்னணி கட்சியினர், தடுப்புகளை உடைத்துச் சென்றனர்.
ஆனால் போலீஸ் அவர்களை அனுமதிக்காத நிலையில் CISF வீரர்களுடன் செல்லுமாறு மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டார் இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று CISF வீரர்களை அழைத்துக்கொண்டு பல்வேறு இந்து அமைப்பினர் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வந்தனர். ஆனால் அவர்களை அனுமதிக்காத போலீஸ் அதிகாரிகள் We're not allowing...We'll face the consequences என்று குறிப்பிட்டனர்.
-
அண்ணாமலை + கேடி ராகவனுக்காக.. அதிமுகவிடம் 5 தொகுதிகளை மாற்றி கேட்ட பாஜக.. யோசிக்கும் எடப்பாடி -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
பல்ப் கொடுத்த பாஜக.. கோபத்தில் குஷ்பூ! நயினாருக்கு தெரியாமல் ஆடிய கேம்! சீனுக்குள் வந்த சுந்தர்.சி! -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications