தினகரனுடன் இணையப் போகிறாரா ஓ.ராஜா... அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதால் கடும் அதிருப்தி!
டிடிவி தினகரனுடன் ஓ. ராஜா இணைய போவதாக கூறப்படுகிறது.
மதுரை: செந்தில் பாலாஜி தந்த தைரியம்... யாருக்காவது தங்கள் கட்சியில் கொஞ்சம் எசக்கு பிசக்கு ஆகிவிட்டாலும், உடனே திமுகவில் சேர போகிறோம், தினகரனுடன் இணைய போகிறோம் என்றே மிரட்ட தொடங்கி விடுகிறார்கள்!
கட்சியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஓ.ராஜாவும் இதைதான் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். இன்னும் அவர் எதற்காக டிஸ்மிஸ் செய்யப்பட்டார் என்ற உண்மை காரணமே இதுவரை நமக்கு புரியவில்லை.
ஒரு பக்கம் டிஸ்மிஸ் என்பது ஒரு தந்திரம் என்கிறார்கள், மற்றொரு பக்கம் ஓ.ராஜா கோபத்தில் இன்னொரு கட்சிக்கு தாவப் போகிறார் என்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வத்தை முன்னிறுத்திதான் இவ்வளவு நாள் தேனி மாவட்டத்தில் அரசியல் செய்து கொண்டிருந்தார் ஓ.ராஜா.

அவமானம்
இப்படி பதவி ஏற்ற கொஞ்ச நேரத்திலேயே டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பது பெருத்த அவமானமாக ஓ.ராஜா நினைக்கிறாராம். பதவி பறிப்பு என்பது வேறு, டிஸ்மிஸ் என்பது வேறு. இவ்வளவு நாள் மாவட்டத்தில் கட்டி காத்த கவுரவம் எல்லாம் காற்றில் போய்விட்டதே என்று செம டென்ஷனில் இருக்கிறாராம்.

பழி வாங்குதலா?
இனியும் அதிமுகவிலேயே இருந்தால் கட்சிக்குள், ஊருக்குள், தமக்கு செல்வாக்கு இருக்காது என்றே ஓ.ராஜா கருதுகிறார். அதனால்தான் அண்ணனை பழிவாங்கவும், ஓபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுக்கவும் டிடிவி அணியில் ஓ.ராஜா இணைய போவதாக கூறப்படுகிறது.

கூடுதல் பலம்
அப்படி மட்டும் இணைந்துவிட்டால், அது தினகரனுக்குத்தான் பலம். இன்னும் சொல்லப் போனால் தங்க.தமிழ்செல்வனுக்குத்தான் பலம். ஏற்கனவே அந்த தொகுதியில் அசைக்க முடியாத ஆதரவில் தங்க.தமிழ்செல்வன் இருக்கும்போது, ஓ.ராஜா இணைவது கூடுதல் பலம்தான்.

அணி மாறுகிறாரா?
ஓபிஎஸ்ஸா? தங்க.தமிழ்செல்வனா என்ற மாறி மாறி எழும் கேள்விக்கு ஓ.ராஜா இணைப்புக்கு பிறகு இறுதி விடையே கிடைத்துவிடும். அது மட்டும் இல்லை, சில தினங்களாகவே டிடிவி அணியிலிருந்து தங்க. தமிழ்செல்வன் அணிமாற போவதாக தகவல்கள் வருகின்றன.

இணைவது உறுதி
ஒருவேளை தங்க. தமிழ்செல்வன் அமமுகவிலிருந்து வெளியேறி விட்டதாகவே வைத்து கொண்டாலும், அந்த இடத்தை நிரப்ப போவது ஓ.ராஜாதான் என்று கூறப்படுகிறது. எப்படி பார்த்தாலும் தினகரனுடன் ஓ.ராஜா இணைய போவது மட்டும் உறுதி என்றே தேனிமாவட்ட அதிமுகவினர் சொல்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications