உலக நீரிழிவு தினம் - டைப் 1 நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் சாதிக்கலாம்
டைப்-1 சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு இன்சுலினைத் தவிர வேறு எந்த மருந்தும் இல்லை வேறு எந்த மருந்தாலும் இந்த டைப்-1 சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே, மாற்று மருந்தைத் தேடி போக வேண்டாம். அது, உயிருக்கே ஆபத்தை ஏற்
மதுரை: இன்று சர்வதேச நீரிழிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. டைப் 1 வகை சர்க்கரை இன்றைக்கு பெரும்பாலான குழந்தைகளை பாதித்து வருகிறது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சராசரி மனிதர்களை விட அதிக ஆரோக்கியமாக வாழலாம் என்று பலருக்கும் எடுத்துக்காட்டாக சிலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். டைப் 1 வகை நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட திருமதி பீமாஜன் யூசுஃப்,, பிரசாந்த் மணி பாரதிராஜா வாழ்க்கை முறை பற்றியும், என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம் என்றும் நமது ஒன் இந்தியா தமிழ் இணைய தள பக்கத்திற்காக தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

நீரிழிவு நோய்க்கான இன்சுலின் கண்டுபிடித்தவர் களில் ஒருவரான சர் ப்ரெட்ரிக் பான்டிங்கின் பிறந்த நாளை போற்றும் விதமாக நவம்பர் 14ஆம் தேதி 'உலக நீரிழிவுநோய் தினம்' அனுசரிக்கப்படுகிறது. 50 வயதை கடந்த பெரும்பாலானோர் நீரிழிவு நோய்க்கான சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பார்கள். தற்போது அதன் நிலை மாற்றமடைந்துவிட்டது. அதாவது 50 வயது என்ற அளவுகோள் 40, 30 என்று குறைந்து கொண்டே வருகிறது.
இது குறித்து உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சர்வதேச நீரிழிவு நோய் அமைப்பும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து செயல்பட்டுவருகின்றன.

டைப் 2 சர்க்கரை நோய் பற்றியும் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய உணவு பழக்க வழக்கங்கள் பற்றியும் பலருக்கும் தெரிந்திருக்கும். உணவில் கவனம் செலுத்தினால் நீரிழிவை தடுக்கலாம் என்று பல மருத்துவர்களும் கூறி வருகின்றனர். இன்றைய தினம் நாம் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் டைப் 1 வகை நீரிழிவு பற்றியும் டைப் 1 நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்றும் தெரிந்து கொள்வோம்.
திருமதி பீமா ரோஸ் தனது 20 வயதில் டைப் 1 வகை நீரிழிவு இருப்பதை கண்டுபிடித்தார். இப்போது அவருக்கு 55 வயதாகிறது. கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக உற்சாகமாக ஆரோக்கியமாக சராசரி மனிதர்களை விட சாதனையாளராக வாழ்ந்து கொண்டிருக்கிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த பீமா ரோஸ் டைப் 1 நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் சாதாரண மனிதர்களைப் போல திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் தற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வசித்து வருகிறார். தன்னைப்போல டைப் 1 நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலவித ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்து வருகிறார்.

குழந்தைகளைப் பாதிக்கும் டைப்-1 சர்க்கரை நோய் இந்தியாவில் அதிகரித்துவருகிறது. இதற்கான சிகிச்சைமுறை மற்றும் இன்சுலின் எடுப்பதன் முக்கியத்துவம் பற்றி பலருக்கும் தெரிந்திருக்காது. டைப் 1 நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக Tamilnadu Type 1 Diabetes Foundation என்ற அமைப்பை தொடங்கி உதவி செய்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த பிரசாந்த் மணி. சிறு வயதில் டைப் 1 நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட பிரசாந்த்மணி இன்றைக்கு சராசரி இளைஞர்களை விட அதிகம் வேலை செய்கிறார். இந்தியாவையே சுற்றி வரும் அளவிற்கு உற்சாகமாக செயல்படுகிறார். அவர் தினசரியும் தனது சர்க்கரை அளவை கட்டுப்படுத்த 7 முறை இன்சுலின் ஊசிகள் செலுத்திக்கொள்வதாக கூறியுள்ளார்.
சர்க்கரை நோய் என்பது பணக்காரர்களுக்கான நோய் என்று நினைத்த காலம் மாறி விட்டது. இன்றைக்கு யாருக்கு வேண்டுமானாலும் இந்த நோய் வரலாம். ஏழைகள், இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்றெல்லாம் இந்த நோய்க்கு தெரியாது எனவேதான் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பீமா ரோஸ்,பிரசாந்த் மணி, கோவையைச் சேர்ந்த பாரதிராஜா உதவி செய்து வருகின்றனர்.

டைப் 1 சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா என்று பலரும் கேட்கலாம். திருமண வாழ்க்கையில் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று அனுபவப்பூர்மாக கூறியுள்ளார் திருமதி பீமாஜன் யூசுஃப், தினசரியும் 15 மணிநேரத்திற்கும் மேலாகவே உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். படிப்பதிலோ, வேலை செய்வதிலோ எந்த தடையும் ஏற்படாது என்பதுதான் டைப் 1 நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவர்கள் தரும் நம்பிக்கை.
டைப் 1 சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாகும். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பல உதவிகளை செய்கிறது வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கிறது. டைப் 1நோயாளிகளுக்கு கணையம் முற்றிலும் செயல்படாது இன்சுலின் சுரக்கவே சுரக்காது எனவே நாங்களும் மாற்றுத்திறனாளிகள்தான் என்பது இவர்களின் கருத்து. எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கும் சலுகைகளை டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கும் அரசு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சராசரி உணவை உட்கொள்ளலாம். டைப் 1 நீரிழிவு நோயாளிகள் இனிப்பு பலகாரங்களை சாப்பிட்டாலும் அதற்கேற்ப இன்சுனில் செலுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர். டைப் 1 நீரிழிவு வந்து விட்டதே என்று அஞ்சத் தேவையில்லை என்றும் திருமதி மீரா ஜோஸ் கூறியுள்ளார். டைப் 1 நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவ தயாராக இருக்கும் திருமதி பீமாஜன் யூசுஃப்,பிரசாந்த் மணி, பாரதிராஜா ஆகியோரோரை 9444085840 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். https://instagram.com/tntype1?utm_medium=copy_link, https://www.facebook.com/TNType1/ என்ற சமூக வலைத்தள பக்கங்களுக்கும் சென்று
Tamilnadu Type 1 Diabetes Foundation அமைப்பின் சேவைகளை தெரிந்து கொள்ளலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications