மதுரையில் கந்துவட்டி காரணமாக இளைஞர் தற்கொலை.. வைரலான மரண வாக்குமூலம்
மதுரை: மதுரையில் கந்துவட்டி காரணமாக இளைஞர் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மரண வாக்குமூல வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது
மதுரை அன்சாரி நகர் 7வது தெருவை சேர்ந்த முகமது அலி -பாத்திமா தம்பதியருக்கு ஜேஷிமா என்ற 8 வயது பெண் குழந்தையும், 2 வயது இம்ரான் என்கிற ஆண் குழந்தையும் உள்ளனர். இவர் மஹபூப்பாளையம் பகுதியில் உணவகம் நடத்தி வந்தார்.
8 மணி நேர திக்திக் போராட்டம்.. உபியில் 180 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த.. 4 வயது சிறுவன் மீட்பு
அதனை விருத்தி செய்ய ரமா என்பவர் மூலம் வழக்கறிஞர் செல்வகுமார் என்பவரிடமிருந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் ரூபாய் 5 லட்சம் ரூபாய் பெற்று தந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதற்கான மாத தவணையை தவறாமல் செலுத்தி வந்திருந்த முகமது அலி தொழிலில் ஊரடங்கு காரணமாகவும் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் தவணை தொகை செலுத்த முடியாமல் தவிர்த்துள்ளார்.

மிரட்டல்
இந்நிலையில் முகமது அலி மேலும் நான்கு நபர்களிடம் கடன் தொகை பெற்றதாகவும் கூறப்படுகிறது, அவர்களும் தொடர்ந்து நெருக்கடி கொடுத்தது மட்டுமல்லாமல் தொலைப்பேசி மூலம் மிரட்டல் விடுத்தும் வந்திருந்ததால் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளான முகமது அலி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக தற்கொலை முயற்சி செய்துள்ளார். அப்போது உறவினர்கள் அவரை மீட்டு அறிவுரை கூறி வந்தனர்.

தற்கொலை
இந்நிலையில் நேற்றைய தினம் விரக்தி அடைந்த முகமது அலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக தனது நிலை குறித்து தனது மன வேதனையை குறித்தும் மரண வாக்குமூலமாக வீடியோ பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் தனக்கு கடன் தொல்லை அளித்தவர்கள் பெயரை குறிப்பிட்டு அவர்கள் மீது மதுரை மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து தனது குடும்பத்தையும் தொல்லை செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

என்ன காரணம்
இறந்தவர் மனைவி பாத்திமா, கூறுகையில், தனது கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னதாக செல்வ குமார் என்பவரிடம் ரமா என்பவர் மூலம் 5 லட்சம் ரூபாய் பணம் பெற்றிருந்தார். தொடர்ந்து தொலைபேசி அழைப்புகளால் மன உளைச்சலில் இருந்து வந்தவர் எங்களிடமும் குழந்தைகளிடமும் இதுவரையில் அது குறித்து பெரிய அளவில் பகிர்ந்து கொள்ளவில்லை, கடன் வழங்கிய நபரோ வீட்டிற்கு வந்ததாக நினைவில்லை தொடர்ந்து தொலைபேசியின் மூலமாகவே மிரட்டல் தெரிவித்து வந்துள்ளார் என்பது முகமது அலி வெளியிட்ட வீடியோ பதிவின் மூலமாக தான் எங்களுக்கு தெரிய வருகிறது. தொடர்ந்து திடீரென தற்கொலை செய்து கொண்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.

நடவடிக்கை தேவை
இறந்தவரின் அண்ணன் காதர் கூறும் போது, தனது தம்பி உயிரிழந்திருப்பது மிகுந்த மன வேதனை அடைய செய்கிறது, தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை முயற்சிக்கு தூண்டும் வகையில் அவருக்கு நெருக்கடி அளித்து துன்புருத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு கோரிக்கை விடுத்தார்.