டுவிஸ்ட்! எங்க “ஜாதி”ஓட்டு பாஜகவுக்கு இல்ல.. குஜராத்தில் தாமரைக்கு புது டென்சன்! 61 லட்சம் ஓட்டாச்சே
காந்திநகர்: குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து இருக்கும் சூழலில் அம்மாநிலத்தில் வசிக்கும் மல்தாரி சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்து மகாபஞ்சாயத்து மூலம் பகிரங்க அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்கள்.
குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. டிசம்பர் 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலம் என்பதால் குஜராத்தில் பெரும்பான்மை தொகுதிகளை வென்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்போடு பாஜக செயல்பட்டு வருகிறது.

ஜாதி அரசியல்
இதற்காக பல்வேறு வியூகங்களை வகுத்து அக்கட்சி செயல்பட்டு வருகிறது. குறிப்பாக குஜராத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் பட்டிதார் சமுதாயத்தை சேர்ந்த முதலமைச்சர் பூபேந்திர பட்டேலையே இம்முறையும் முதலமைச்சர் வேட்பாளராக பாஜக அறிவித்து இருப்பது பாசிட்டிவான ஒன்றாக உள்ளது.

பட்டேல் சமுதாயம்
அதேபோல் பட்டிதார் சமுதாயத்தின் இளம் தலைவரான ஹர்திக் பட்டேல் காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்தது அக்கட்சிக்கு பெரும் பலமாக காணப்படுகிறது. இதனால் கடந்த 2017 ஆம் ஆண்டு அந்த சமுதாயத்திடம் இருந்து பாஜகவுக்கு எழுந்த எதிர்ப்பு இம்முறை இருக்காது என்ற பேச்சு அடிபடுகிறது.

வாக்கு விகிதம்
இதேபோல் காங்கிரஸில் இருந்த பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த தலைவர்கள் பாஜகவிற்கு தாவி இருப்பதும் அக்கட்சிக்கு பலமாக அமைந்து உள்ளது. இஸ்லாமியர்கள், பட்டியலின மக்கள், நகர்புறங்களில் வசிப்பவர்களின் வாக்குகள் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடம் பிரிந்து செல்லும் என்பதால் தங்களுக்கு வெற்றி உறுதி என்ற மனநிலையில் பாஜக இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

புதிய டென்சன்
இந்த நிலையில்தான் அக்கட்சியிகு கடைசியில் நேரத்தில் பேரதிர்ச்சியை தரும் செய்தியாக கிடைத்து உள்ளது மல்தாரி சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எடுத்து இருக்கும் முடிவு. பாரதிய ஜனதா கட்சியின் கடந்த ஒன்றரை ஆண்டுகால ஆட்சியில் தாங்கள் அதிருப்தி அடைந்து இருப்பதாக மல்தாரி மகாபஞ்சாயத்து தெரிவித்து உள்ளது.

மல்தாரி சமுதாயம்
இந்த ஒன்றரை ஆண்டுகள் பட்டிதார் சமுதாயத்தை சேர்ந்த புபேந்திர பட்டேல் முதலமைச்சராக ஆட்சி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கடந்த திங்கட்கிழமை மெஹ்சானாவில் கூடிய மல்தாரி மகாபஞ்சாயத்தில் அதன் மாநில செய்தித் தொடர்பாளர் நாக்ஜிபாய் தேசாய் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

மக்களுக்கு அறிவுறுத்தல்
அதில், "குஜராத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகால பாஜக ஆட்சியில் மல்தாரி சமுதாயத்தினர் மகிழ்ச்சியாக இல்லை. மல்தாரி மக்கள் ஒன்றுபட்டு இந்த ஜனநாயகத்தில் ஓட்டுக்கு இருக்கும் பலத்தை காட்ட வேண்டும். டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதி நடைபெறும் குஜராத் தேர்தல் வாக்குப்பதிவில் மல்தாரி சமுதாயத்தினர் பாஜகவுக்கு வாக்களிக்கக்கூடாது.

காங்கிரஸுக்கு ஆதரவு
நமது சமுதாயத்துக்கு உறுதுணையாக இருக்கும் மாநில காங்கிரஸ் தலைவர் ஜெக்தீஷ் தாகோர் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு நாம் நன்றிக்கடன்பட்டு இருக்கிறோம். ஓட்டு என்ற ஆயுதத்தை ஏந்த இந்த தேர்தலில் பாஜகவுக்கு நமது சமுதாய மக்கள் தக்க பாடத்தை புகட்டிட வேண்டும்." என்று கூறி இருக்கிறார். குஜராத்தில் 61 லட்சம் வாக்குகளை கொண்ட மல்தாரி சமுதாயத்தினர் அம்மாநில மக்கள் தொகையில் 8.5% ஆக உள்ளனர்.












Click it and Unblock the Notifications