Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புது மாப்பிள்ளை.. டெல்லி வேலை.. குறுக்கே வந்த 'கஸ்டமருக்கு' கை மாறிய மனைவி! கொடூர கிரைம்!

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் திருமணமான கையோடு டெல்லிக்கு வேலைக்கு சென்ற இளைஞர் ஒருவர் அங்கு தனது மனைவியை பணத்திற்காக விற்பனை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மனைவி அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து காவல்துறையினர் கணவனை கைது செய்துள்ளனர்.

இது அம்மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொருவரை தேடி வருகின்றனர்.

திருமணம்

திருமணம்

ஒடிசா மாநிலம் கலஹண்டி மாவட்டத்தின் நார்லா பகுதியில் வசித்து வருபவர் 'கீரா பெருக்'. இவருக்கு பெற்றோர்கள் நீண்ட நாட்களாக வரன் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் பார்த்த பெண்ணை இவருக்கு பிடித்திருந்திருக்கிறது. பெண்ணுக்கும் இவரை பிடித்திருந்த நிலையில், இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இருவரும் ஒருவருடன் ஒருவர் பேசி நெருக்கமாகி திருமண ஆசையை வளர்த்து வந்துள்னர். இதனையடுத்து எதிர்பார்த்தபடி திருமணத்திற்கு தேதி குறிக்கப்பட்டு திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுமாப்பிள்ளை

புதுமாப்பிள்ளை

பின்னர் திருமணமும் விமர்சையாக நடைபெற்றுள்ளது. ஆனால் இதில் ஒரு சிக்கல் மேலெழுந்துள்ளது. அதாவது திருமணத்திற்கு பிறகு மாப்பிள்ளை டெல்லிக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. சரி திருமணத்திற்கு பின்னர் சில நாட்கள் கழித்து டெல்லி அனுப்பி வைக்கலாம் என்று பெண் வீட்டார் நினைத்துள்ளனர். இப்படி இருக்கையில் திருமணமான இரண்டு தினத்திலேயே மாப்பிள்ளை கீரா பெருக் டெல்லி போக வேண்டும் என்று அடம் பிடித்துள்ளார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் பெண் வீட்டிலிருந்து குழம்பியுள்ளனர்.

டெல்லி வேலை

டெல்லி வேலை

இறுதியாக, "சரி மாப்பிள்ளையுடன் பெண்ணும் டெல்லி போகட்டும்" என்று பெண் வீட்டார் சொல்லவே "இல்லீங்க அதுல்லாம் சரிப்பட்டு வராது" என்று கீரா பெருக் அதனை மறுத்துள்ளார். எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பெண்ணை மாப்பிள்ளையுடன் அனுப்பி வைத்துள்ளனர் பெண் வீட்டார். கடந்த 30ம் தேதி மாப்பிள்ளை கீரா பெருக் மணப்பெண் என இருவரும் டெல்லி சென்றுள்ளனர். இரண்டு நாள் எல்லாம் சரியாக போய்கொண்டிருந்தது. மூன்றாவது நாள் மணப்பெண்ணிடம் உறவினர்கள் பேச முயற்சிக்கையில் மாப்பிள்ளை ஏதேதோ காரணம் சொல்லி இதனை தவிர்த்துள்ளார்.

கம்பி நீட்டிய கணவன்

கம்பி நீட்டிய கணவன்

பின்னர் சரியாக 5ம் தேதி மணப்பெண்ணின் தந்தைக்கு ஓரு செல்போன் அழைப்பு வருகிறது. மறுமுனையில் அவரது மகள் கதறி அழுதுள்ளார். உடனடியாக தந்தை நார்லா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதாவது அவசரமாக டெல்லி செல்ல வேண்டும் என்று மனைவியை அழைத்துக்கொண்டு கிளம்பிய மாப்பிள்ளை இரண்டு நாட்களில் தனது மனைவியை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டு 'பல்க்காக' பணம் வாங்கிக்கொண்டு கம்பி நீட்டியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத மணப்பெண் இயல்பு நிலைக்கு திரும்புவதற்குள் எல்லாம் நடந்துவிட்டிருக்கிறது. பின்னர் அங்கிருந்து அவரது தந்தைக்கு அப்பெண் செல்போனில் பேசி விவரத்தை கூறவே அதிர்ந்து போன தந்தை புகார் கொடுத்துள்ளார். இப்படியாக விஷயம் வெளிவந்துள்ளது.

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

திருமணமான இரண்டே நாட்களில் தனது மனைவியை ஒருவர் விற்பனை செய்துள்ளது பீகாரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே ராஜஸ்தானில் பெண்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. அதாவது இம்மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கப்படும். அவசர தேவைக்கு பணம் பெறுபவர்கள் இந்த பணத்தை திருப்பி செலுத்த முடியாமல் போகும்போது அதற்காக பணத்தை பெற்றவர்களின் மகள் ஏலம் விடப்படுவார். இப்படியாக ஏலத்தில் எடுக்கப்படும் பெண்கள் பாலியல் தொழிலில் தள்ளப்படுகின்றனர். இது குறித்து மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+