விடிய விடிய நடத்தப்பட்ட சோதனை! வெளியான தவறான தகவல்கள்.. மார்ட்டின் குழுமம் விளக்கம்
சென்னை: மார்ட்டின் குழும நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை குறித்து நிறுவனம் தற்போது விளக்கமளித்துள்ளது.
இந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது, "எங்களது மார்ட்டின் குழும நிறுவனத்திற்கு சொந்தமான இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த 12.10.2023 காலை 7 மணி முதல் 16.10.2023 காலை 10 மணி வரை நடத்தப்பட்ட வருமான வரி சோதனை தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் குறித்த தவறான புரிதல்களை நீக்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, நாங்கள் பின்வரும் விளக்கங்களை கூற விரும்புகிறோம்.

முதலாவதாக, இந்தியா முழுவதும் உள்ள எங்களது குழும நிறுவனங்களில் அமலாக்க துறையால் சோதனை நடத்தப்படவில்லை, மாறாக நடைபெற்றது வருமான வரித்துறை சோதனையாகும். இதனை மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் இயங்கி வரும் வருமான வரித்துறையினர் நடத்தினர். இதற்காக எங்கள் நிறுவனங்களின் அதிகாரிகள் தங்களது ஒத்துழைப்பை முழுமையாக வழங்கியுள்ளனர். ஆனால் "சட்ட விரோத பணமோசடி தடுப்புச் சட்ட (PMLA) விதிகளின் கீழ் அமலாக்க துறையினரால் சோதனை நடத்தப்பட்டது என்று பல்வேறு செய்தி சேனல்கள், அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் உண்மைக்கு மாறான, அவதூறான மற்றும் சட்டத்திற்கு புறம்பான பல்வேறு தகவல்களை செய்தியாக வெளியிட்டிருப்பதாக எங்களுக்குத் தெரிய வந்துள்ளது. மேற்கண்ட செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை அமலாக்க துறை அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்டது புறம்பானதும் மற்றும் பொய்யானதும் ஆகும்.
இரண்டாவதாக, இந்திய அரசியலமைப்பின் மத்திய சட்டம், பட்டியலில் உள்ள ஏழாவது அட்டவணை, வரிசை 40 இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையிலும், மேலும் இந்திய அரசாங்கம் இயற்றிய லாட்டரி (ஒழுங்குமுறை) சட்டம், 1998 மற்றும் லாட்டரி (ஒழுங்குமுறை) விதிகள், 2010 ன் கீழும், மேற்கூறிய சட்டங்களின் படி அந்தந்த மாநில லாட்டரி விதிகளுக்கு இணங்க, இந்தியாவில் லாட்டரி வர்த்தகத்தை ஒழுங்கமைக்கவும், நடத்தவும் மாநில அரசுகள் பெற்றுள்ள அதிகாரத்தின் படியும், இயற்றப்பட்ட விதிகளின்படியும், முறையாக ஒழுங்கமைக்கப்பட்டு எங்கள் நிறுவனங்கள் இந்தியாவில் மாநில அரசாங்க லாட்டரிகளை லாட்டரி வர்த்தகம் அனுமதிக்கப்பட்ட மாநிலங்களில் விற்கின்றன. மேலும் மாநில அரசுகளால் அரசிதழில் வெளியிட்டு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக அந்தந்த மாநிலங்களில் நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு இணங்க விதிகளின்படி செயல்பட்டு வருகிறது.
மூன்றாவதாக, எங்களது குழும தலைவர் உயர்திரு.S.மார்ட்டின் அவர்கள் கடந்த 2002-2003 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே அதிகமாக தனிநபர் வருமான வரி (தோராயமாக ரூ.100 கோடியை) செலுத்தியுள்ளார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் அவரும் அவரது குழும நிறுவனங்களும் கூட்டாக கீழ்கண்டவாறு வரி செலுத்தியுள்ளனர்:-
எங்களது குழும நிறுவனங்கள் ஜூலை, 2017 முதல் செப், 2023 வரை ஜி.எஸ்.டியாக (GST) ரூ.23,119 கோடிகள் மாநில/மத்திய அரசுகளின் கீழ் உள்ள அந்தந்தத் துறைகளுக்கு வரியாக செலுத்தியுள்ளனர். இவ்வாறாக ஆண்டுக்கு சுமார் ரூ.5,000 கோடிகளை ஜி.எஸ்.டி வரியாக செலுத்தியுள்ளனர்.
கடந்த 1985-1986 வது நிதியாண்டு முதல் 2022-2023 வது நிதியாண்டு வரை வருமான வரியாக ரூ.4,577 கோடிகள் மற்றும் முந்தைய நிதியாண்டுக்கான வருமான வரியாக சுமார் ரூ.600 கோடிகளை இந்திய அரசாங்கத்திற்கு வரியாக செலுத்தியுள்ளனர், வருமான வரித்துறை சோதனையின்போது மேற்கூறிய அனைத்து விவரங்களும் சோதனை அதிகாரிகளுக்கு உரிய முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களது குழும நிறுவனங்களும், அதன் தலைவர் உயர்திரு. S. மார்டின் அவர்களும் இந்திய சட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு நிறுவனங்களை நடத்திவருகின்றனர் என்றும். மேலும், இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை அளித்து வருகின்றனர். ஆனால் வருமான வரித்துறை சோதனை தொடர்பான உண்மைகளை மிகைப்படுத்தி, தவறாக சித்தரித்து உயர்திரு. S. மார்ட்டின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் கற்பனைக்கு அப்பாற்பட்ட விபரங்களை செய்தியாக வெளியிடுவது எங்களை துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதோடு மட்டுமல்லாமல், மக்களிடத்தில் எங்களைப் பற்றி அவதூறு பரப்பும் விதமாக அமைந்துள்ளது.
எனவே இது போன்ற தவறான சித்தரிப்பு மற்றும் அறிக்கைகளை நம்புவதிலிருந்து பொதுமக்கள் அனைவரும் தெளிவுறும் வகையில் இந்த விளக்கத்தினை தெரிவிக்கின்றோம். எங்களது குழுமத்தினர் நேர்மையான குடிமக்களாக இந்த தேசத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்? -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி












Click it and Unblock the Notifications