மருதுபாண்டியர் குருபூஜை, தேவர் ஜெயந்தி : பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
மருதுபாண்டியர் மற்றும் தேவர் குருபூஜைக்காக அக்டோபர் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்: மருதுபாண்டியர் மற்றும் தேவர் குருபூஜைக்காக அக்டோபர் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு அன்றைய தினம் விடுமுறை விடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா வருகின்ற 28, 29, 30 தேதிகளில் நடைபெற உள்ளது. அந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவிருக்கிறார். இதற்காக 166 படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் பாதுகாப்பு படைகளை அனுப்ப டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குரு பூஜையின்போது போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் 12 யூனிட்டுகள் ஈடுபடுத்தப்படவுள்ளன. துப்பாக்கி, லத்தி, அடையாள அட்டையுடன் போலீசார் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் டிஜிபி தெரிவித்துள்ளார். வரும் 27ம் தேதி காளையார்கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜை நடைபெற உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முன்னர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு 13.7 கிலோ எடை கொண்ட தங்கத்தாலான கவசத்தை வழங்கினார். மதுரை தனியார் வங்கி பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள தங்கக்கவசத்தை, ஆண்டுதோறும் அக்டோபர் 25ஆம் தேதி ஜெயந்தி விழாவுக்காக ஒப்படைப்பதை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தங்கக்கவசமானது தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜனிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதனை முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் உள்ளிட்டோர் தேவர் சிலைக்கு அணிவித்தனர்.
இந்த நிலையில் மருதுபாண்டியர் மற்றும் தேவர் குருபூஜைக்காக அக்டோபர் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், காளையார்கோவிலில் 27ம் தேதி மருதுபாண்டியர் குருபூஜை நடைபெற உள்ளது.
அதற்காக சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதே போல, 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை நடைபெற உள்ளதால் அன்றைய தினமும் மேற்கண்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications