வகுப்பு வரை வந்த கஞ்சா! மண்டைகேறிய போதையில் மாணவர் மீதே தாக்குதல்! குத்தாலத்தில் குமுறும் ஆசிரியர்!
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கஞ்சா அடித்து விட்டு சகமாணவனை தாக்கிய மாணவர்கள் குறித்து காவல்துறையில் புகார் அளித்தும் பலன் இல்லை என்று பள்ளி தலைமை ஆசிரியர் பேசிய விவகாரம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தமிழகத்தில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் விற்பவர்கள் மீதான கடும் நடவடிக்கையை தமிழக காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது. 'கஞ்சா ஆபரேசன் 2.O' என்ற பெயரில் அதிரடி வேட்டையை நடத்த தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறையினருக்கும் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகம் முழுவதும் கஞ்சா ஆபரேசன் 2..O வை தீவிரப்படுத்தி சோதனையையும், கண்காணிப்பையும் காவல்துறையினர் நடத்தி வருவதோடு, நூற்றுக்காணக்கானோரை கைது செய்து வருகின்றனர்.

கஞ்சா புழக்கம்
ஆனாலும் தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனை மற்றும் புழக்கத்தை கட்டுப்படுத்த போலீசார் திணறி வருகின்றனர் என்றே கூறவேண்டும். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கஞ்சா அடித்து விட்டு சகமாணவனை தாக்கிய மாணவர்கள், காவல்துறையில் புகார் அளித்தும் பலன் இல்லை என்று பள்ளி தலைமை ஆசிரியர் பேசும் வாட்ஸ் அப் வேகமாக பரவி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமீபத்தில் 11ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனை கஞ்சா அடித்த சில மாணவர்கள் தாக்கியுள்ளனர்.

மாணவன் மீது தாக்குதல்
அதனால் அந்த மாணவன் பள்ளிக்கு செல்லாமல் தனது பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனை ஆசிரியர்களிடம் சொல்ல வேண்டியது தானே என்று மாணவனின் தந்தை கேட்டதற்கு அதை சொன்னாலும் வெளியே வந்த பிறகு அடிப்பார்கள் என்று தாக்கப்பட்ட பையன் தெரிவித்துள்ளான். இது சம்பந்தமாக மாணவனின் தந்தை பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் பேசும்போது பள்ளியில் 1200 மாணவர்கள் படித்து வருவதாகவும் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் கூட கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். நாங்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளோம் கஞ்சா விற்பனை செய்பவர்களை பிடிப்பதில்லை.

கஞ்சா விற்பனை
பெற்றோர்களால் ஒரு மாணவனை கண்காணிப்பதே சிரமமாக உள்ள நிலையில் 1200 மாணவர்களை கண்காணிப்பதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளது. பள்ளிக்கு வெளியே கஞ்சா விற்பதை நாங்கள் எப்படி தடுக்க முடியும், என்று பரிதாபமாக தலைமை ஆசிரியர் கூறுகிறார். கஞ்சா விற்பனை செய்பவர்கள் குறித்து தகவல் கொடுங்கள் என்று மயிலாடுதுறை டிஎஸ்பி பல்வேறு இடங்களில் நோட்டீஸ் ஒட்டி உள்ளார்.

கடும் அதிர்ச்சி
செய்தியாளர்களிடமும் தனிப்பட்ட முறையில் கஞ்சா விற்கும் நபர்கள் குறித்து தகவல் இருந்தால் கொடுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் கீழ் மட்டத்தில் உள்ள காவல்துறையினர் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் இந்த கஞ்சா விற்பனையை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் பள்ளி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளது சமூக ஆர்வலர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம்












Click it and Unblock the Notifications