விஜய்-க்கு நன்றி சொன்ன Zoho ஸ்ரீதர் வேம்பு.. தவெக வெற்றியால் இனி தமிழ்நாட்டில் 'இந்த விஷயம்' நடக்காது!

Subscribe to Oneindia Tamil

தமிழக அரசியலில் 60 ஆண்டு கால திராவிட அதிகாரத்தை உடைத்து பெரிய வெற்றியை பதிவு செய்திருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தொழில்துறையின் முக்கிய பிரமுகர்களின் பாராட்டையும் பெற்றுள்ளார். உலகளவில் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனமான ஜோஹோவின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, விஜயின் வெற்றியை வரவேற்று எக்ஸ் தளத்தில் முக்கிய பதிவை செய்துள்ளார்.

ஜோஹோ நிறுவனத்தில் பணியாற்றும் பல இளம் ஊழியர்கள் விஜய் மற்றும் தவெகவுக்கு ஆதரவாக இருப்பதாக ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டுள்ளார். "தமிழ்நாட்டில் உள்ள பல இளைஞர்கள் போல, எங்கள் நிறுவனத்தின் இளம் ஊழியர்களும் விஜய்யின் தவெக கட்சியின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்தனர். இந்த வரலாற்று வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என்று அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதர் வேம்பு-வின் வார்த்தைகள் இந்திய தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பொதுவான கருத்தின் பிரதிபலிப்பாகவும் பார்க்கலாம்.

TVK vijay politics zoho Sridhar Vembu Sridhar Vembu Vijay Zoho Founder TVK Win Cash for Votes Tamil Nadu Sridhar Vembu Congratulates Vijay Tamil Nadu Election 2026 2026 Sridhar Vembu Vijay Zoho founder congratulates Vijay cash for votes culture ended TVK historic win 2026 Sridhar Vembu tweet Vijay Tamil Nadu election 2026 Vijay thanks cash for votes young employees support Vijay Tamilaga Vettri Kazhagam victory Zoho Tamil Nadu Sridhar Vembu best wishes Vijay TVK election success cash for votes Tamil Nadu politics Sridhar Vembu X post Vijay 51 year old victory 2026 2026 1

விஜயின் வெற்றியை வெறும் அரசியல் வெற்றியாக மட்டும் பார்க்காமல், தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய சாதனையாக ஸ்ரீதர் வேம்பு புகழ்ந்துள்ளார். "ஓட்டுக்கு காசு என்ற கலாச்சாரத்தை இதுவரை யாரும் அழிக்க முடியாத ஒன்றாக இருந்த நிலையில், அதற்கு முடிவு கட்டியதற்கு நன்றி" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெற்றி வாழ்த்துகளைத் தெரிவித்த பிறகு, ஸ்ரீதர் வேம்பு "நாங்கள் தொழில்நுட்பத் துறையில் புதிய உற்சாகத்துடனும், ஆற்றலுடனும் தொடர்ந்து பணியாற்றுவோம். நன்றி" என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் ஸ்ரீதர் வேம்பு இந்த பதிவுக்கு முன்பே வாக்கு எண்ணிக்கையில் தவெக முன்னிலையில் இருந்த போது, மே 1-ம் தேதி ஸ்ரீதர் வேம்பு ஒரு சுவாரஸ்யமான பதிவை வெளியிட்டிருந்தார், அதை மேற்கோள்காட்டி டெல்லி விமான நிலைய பாதுகாப்பு ஊழியரும், தனது கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரும் (முன்பு அண்ணாமலை ஆதரவாளராக இருந்தவர்) தேர்தல் முடிவை சரியாக கணித்ததாக அவர் ட்வீட் வாயிலாக குறிப்பிட்டார்.

"உண்மையைச் சொல்லப் போனால், இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதில் எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. அவர்கள் தாங்களாகவே சொன்ன கருத்தை நான் பகிர்ந்தேன்" என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்தப் பழைய பதிவு இப்போது மீண்டும் பேசப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+