"நம்மை விட்டு போக கூடாது" காதலனுக்கு 15 வயது மகளை திருமணம் செய்து வைத்த தாய்.. கட்டாய உறவு வேறு!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தனது 15 வயது மகளை தாய் ஒருவர் காதலனுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவை சேர்ந்தவர் 36 வயது பெண். இவருக்கு 15 வயதில் மகள் இருக்கிறார். இந்த நிலையில் இவரது உறவினர் 28 வயது நபரை காதலித்து வந்துள்ளார். தனது காதல் வாழ்க்கை பறி போய்விடக் கூடாது என்பதற்காக அந்த பெண் தனது 15 வயது மகளை அந்த காதலனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த சிறுமியிடம் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிடுவேன் என அந்த பெண் மிரட்டியதாக தெரிகிறது.

தாய் பாசம்
இதனால் தாய் மீதுள்ள பாசத்தால் அந்த சிறுமியும் சம்மதித்துள்ளார். நவம்பர் 6 ஆம் தேதி அகமதுநகரில் உள்ள ஒரு கோவிலில் தனது காதலனுக்கும் மகளுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணம் செய்து வைத்ததோடு அந்த இளைஞருடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்த தாய் வற்புறுத்தியதாக தெரிகிறது.

தாய் தற்கொலை மிரட்டல்
அப்போதும் தாய் தற்கொலை பிளாக்மெயில் செய்ததால் இஷ்டம் இல்லாமல் சென்ற சிறுமியை அந்த நபர் கட்டாயப்படுத்தி உறவு கொண்டுள்ளார். இதை அந்த சிறுமி தனது தோழியிடம் தெரிவித்துள்ளார். அப்போது அங்கிருந்த சமூக சேவகர் ஒருவரால் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

சந்தன்நகர் காவல் நிலையம்
இதையடுத்து புகாரின் பேரில் சந்தன்நகர் காவல் நிலைய அதிகாரிகள் 36 வயதான பெண்ணையும் அவரது காதலனையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது. அந்த நபர் தூரத்து உறவுக்காரர் என்றும் பணிநிமித்தமாக அந்த 36 வயது பெண்ணுடன் தங்கியிருந்த போது இருவருக்கும் இடையே காதல் பற்றி கொண்டது என விசாரணையில் தெரிகிறது. எனினும் அவரது காதலன் குறித்து எந்த தகவலும் இல்லை.

15 வயது சிறுமி
காதல் மோகத்திற்காக தனது 15 வயது சிறுமியின் வாழ்க்க்கையே சீரழித்த தாய்க்கும் தன்னை விட வயதில் சிறிய குழந்தை என்றும் பாராமல் அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி உறவு கொண்ட அந்த இளைஞருக்கும் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. சிறுமிக்கு கவுன்சலிங் கொடுத்து அவருக்கு கல்வியையும் தைரியத்தையும் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
-
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications