'மும்பையில் 3% டைவர்சுக்கு காரணமே டிராபிக்தான்'.. பாஜக தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி கலகல!
மும்பை: சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா போன்ற நகரங்களை போன்று இந்தியாவின் நெருக்கடி மிகுந்த நகரமாக விளங்கும் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலும் போக்குவரத்து நெரிசல் என்பது தீராத தலைவலியாக இருக்கிறது.
Recommended Video
இங்கு காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசலை சமாளித்து வாகனங்களில் செல்வது என்பது இமயமலை சிகரத்தில் ஏறுவது போன்றதாகும். இந்த நிலையில்தான் மும்பையின் போக்குவரத்து நெரிசல் குறித்து கலகலப்பாக கூறியுள்ளார் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸ்.

3% சதவீத டைவர்சுக்கு இதுதான் காரணம்
இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய அவர், மும்பையில் உள்ள சாலைகள் குண்டு குழியுமாக காணப்படுகிறது. மும்பையில் 3% சதவீத திருமண விவாகரத்துகள் (டைவர்ஸ்) கடும் போக்குவரத்து நெரிசல்(ஃடிராபிக்) காரணமாக நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல்களில் சிக்கி விடுவதால் மக்கள் தங்கள் குடும்பங்களுக்கு போதிய நேரம் ஒதுக்க முடியாமல் போகிறது.

ஒரு பெண்ணாக உங்களுடன் பேசுகிறேன்
இதனால் குடும்பங்களில் விவாகரத்து ஏற்படுகின்றன. நான் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி என்பதை மறந்து விடுங்கள். நான் ஒரு பெண்ணாக உங்களுடன் பேசுகிறேன். மும்பை சாலைகளில் உள்ள பள்ளங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் மக்களை எவ்வாறு தொந்தரவு செய்கின்றன என்பதை நான் நேரடியாகவே பலமுறை அனுபவித்திருக்கிறேன்'' என்று அம்ருதா ஃபட்னாவிஸ் தெரிவித்தார்.

சிவசேனா பதிலடி
அம்ருதா ஃபட்னாவிவின் இந்த வினோதமான கருத்துக்கு சிவசேனா மூத்த தலைவர் பிரியங்கா சதுர்வேதி அவரது பாணியிலேயே பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், '3% மும்பைவாசிகள் போக்குவரத்து நெரிசல் காரணமாக விவாகரத்து செய்கிறார்கள் என்று கூறிய இந்த பெண்ணுக்கு (அம்ருதா ஃபட்னாவிஸ்) இந்த நாளின் சிறந்த (IL) லாஜிக் விருது வழங்கப்படுகிறது.

பெங்களூர் குடும்பங்கள் தயவு செய்து படிக்காதீர்கள்
பெங்களூர் குடும்பங்கள் தயவு செய்து இதை படிப்பதைத் தவிர்க்கவும், அது உங்கள் திருமணத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்' என்று பிரியங்கா சதுர்வேதி ஸ்மைல் ஈமோஜியுடன் கூறியுள்ளார். போக்குவரத்து நெரிசலில் மும்பைக்கு கொஞ்சம் கூட சளைத்தது அல்ல பெங்களூர். காலை, மாலை வேளைகளில் டிராபிக்கால் பெங்களூருவாசிகள் படாதபாடு பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications