திருநங்கையாக நடித்து சில்மிஷம்! ஆசிரியையை பாத்ரூமில் வைத்து பலாத்காரம்.. போலி சாமியாருக்கு சிறை
மும்பை: குடும்பத்தில் கஷ்டத்தை தாங்க முடியாமல் சாமியாரிடம் ஆலோசனை கேட்கலாம் என்று சென்ற ஆசிரியையை சாமியார் ஒருவர் தன்னை திருநங்கை என்று கூறிக்கொண்டு ஆசிரியையை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பரேலில் உள்ள தனது மாணவியின் வீட்டிற்கு ஆசிரியை ஒருவர் சென்றிருக்கிறார். அப்போது மாணவியின் குடும்பத்தினருடன் தான் கடந்து வந்த வாழ்க்கை குறித்து பேசியிருக்கிறார். இதனை கேட்ட மாணவியின் பெற்றோர்கள் ஒரு யோசனையை கூறியுள்ளனர். அதாவது தங்களது வீட்டிற்கு அருகில் ஒரு திருநங்கை சாமியார் இருப்பதாகவும் அவர் இதுபோன்ற பிரச்னைகளுக்கு உரிய தீர்வை சொல்வதாகவும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து அந்த சாமியாரை பார்க்க ஆசிரியை தனது மாணவியுடன் சென்றிருக்கிறார். அந்த இடம் மாணவியின் வீட்டிலிருந்து கொஞ்சம் தூரத்தில்தான் இருந்திருக்கிறது. அது ஒரு சிறிய ஆசிரமம் போல செயல்பட்டு வந்திருக்கிறது. ஆசிரமம் உள்ளே சென்று பார்க்கையில் சாமியார் 'நரசிம்ம பிச்சப்பா ஷிர்வதி' இவர்களை வரவேற்றிருக்கிறார். வரவேற்று என்ன பிரச்னை என்று கேட்டிருக்கிறார். இவருடைய நடத்தைகள் அனைத்தும் திருநங்கையை ஒத்திருந்திருக்கிறது.

சாமியார்
இதனையடுத்து ஆசிரியையும் தன்னுடைய குடும்ப பிரச்னைகளை கூறியிருக்கிறார். இவருக்கு ஒரு வருடத்திற்கு முன்னர்தான் திருமணமாகியுள்ளது. திருமணத்திற்கு முன்னர் வரை கடுமையான நெருக்கடியில் இருந்ததாகவும், ஆனால் திருமணம் நடந்துவிட்டால் இந்த நெருக்கடியிலிருந்து மீண்டுவிடலாம் என ஏற்கெனவே சாமியார் ஒருவர் சொன்னதாகவும் ஆசிரியை தெரிவித்திருக்கிறார். ஆனால் திருமணம் நல்லபடியாக நடந்த பின்னரும் எந்தவித மகிழ்ச்சியும் குடும்பத்தில் ஏற்படவில்லை என்று கூறி ஆசிரியை அழுதிருக்கிறார். மட்டுமல்லாது, தனக்கு இன்னும் குழந்தை உண்டாகவில்லை என்றும், கூறியிருக்கிறார்.

பாலியல் பலாத்காரம்
அனைத்து தகவல்களையும் தெரிந்து கொண்ட சாமியார் நரசிம்ம பிச்சப்பா ஷிர்வதி, "உங்கள் மீது தீய பார்வை பட்டிருக்கிறது. இதிலிருந்து வெளி வராத வரையில் உங்களுக்கு விடிவு காலம் பிறக்காது. எனவே இதிலிருந்து வெளியே வருவதற்கு முயற்சி செய்யுங்கள். இதற்கு சில பரிகாரங்கள் இருக்கிறது. அதற்கு நீங்களும் கொஞ்சம் ஒத்துழைக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். ஆசிரியையும் இதற்கு ஒப்புக்கொண்ட நிலையில் பூஜை பரிகாரங்கள் அப்போதே தொடங்கப்பட்டிருக்கிறது. யாகம் வளர்க்கப்பட்டு அந்த இடமே புகையால் சூழப்பட்டிருக்கிறது. இதனையடுத்து எலுமிச்சைப்பழம், மஞ்சள் மற்றும் அத்துடன் கொஞ்சம் அரிசியையும் போட்டு அரைத்து ஆசிரியையின் நெற்றியில் பூசியிருக்கிறார். பின்னர் சில நிமிடங்களுக்கெல்லாம் ஆசிரியை தடுமாற தொடங்கியுள்ளார்.

சாபம்
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சாமியார், ஆசிரியையை அங்கிருந்து குளியலறைக்கு அழைத்து சென்றிருக்கிறார். ஆசிரியைக்கு சுய நினைவு இருந்திருக்கிறது. ஆனால் அவரால் எதையும் செய்யமுடிவில்லை. போதை பொருளால் ஏற்படும் கிரக்கம் போன்று இவருக்கு ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு இருக்கையில் ஆசிரியையை சாமியார் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். ஏறத்தாழ ஒரு 20 நிமிடங்கள் கழித்து மீண்டும் ஆசிரியையை அவர் பூஜை அறைக்கு கொண்டு வந்திருக்கிறார். வரும்போது, "இந்த விஷயத்தை யாரிடமாவது சொன்னால் நீ கொஞ்சம் கொஞ்சமாக செத்துவிடுவாய். அல்லது உன்னுடைய வயிற்றில் கரு வளராது" என்று கூறியிருக்கிறார்.

பயம்
இதனால் பயந்துபோன ஆசிரியை முதலில் இதனை யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் இவருடன் வந்த மாணவிக்கு ஆசிரியையின் உடைகள் கலைந்திருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை. இந்த சம்பவம் நடந்து முடிந்து 5-6 நாள் இருக்கையில் ஆசிரியையின் வீட்டருகில் இந்த சாமியார் மக்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்திருக்கிறார். இத பார்த்து ஆத்திரமடைந்த ஆசிரியை சாமியாரை தாக்கியுள்ளார். இது பெரும் சலசலசப்பை ஏற்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சாமியாரை கைது செய்தனர்.

சிறை
இந்த ஒட்டுமொத்த சம்பவமும் கடந்த 2018ம் ஆண்டு நடந்திருக்கிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையில் ஆசிரியையின் நம்பிக்கையை சாமியார் தவறாக பயன்படுத்தி இருப்பதை நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மட்டுமல்லாது, இந்த குற்றத்தை மறைக்க பில்லி சூனியம் உள்ளிட்டவற்றையும் சாமியார் பயன்படுத்தி இருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக தன்னை திருநங்கை என்று பொய் சொல்லி ஏமாற்றி இருக்கிறார் என்று கூறி சாமியாருக்கு ஓராண்டு சிறை தண்டனையை நீதிபதி விதித்துள்ளார்.












Click it and Unblock the Notifications