பிறந்த நாள் பரிசு.. ஆர்யன் கான் விடுதலையால் பூரிப்பில் ஷாருக் கான்! வழக்கறிஞர்கள் குழுவுடன் 'க்ளிக்'
மும்பை: ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறார் நடிகர் ஷாருக்கான். மகன் ஆர்யன் கானுக்கு போதை மருந்து வழக்கில் கோர்ட் ஜாமீன் வழங்கியதுதான் இதற்கு காரணம்.
சொகுசு கப்பல் விருந்தில் வைத்து ஆர்யன் கான் போதை மருந்தை பயன்படுத்தியதாகவும் கடத்தல் சதி என்றும் குற்றம்சாட்டப்பட்டு ஆர்யன் கான் 21 நாட்கள் மும்பை ஜெயிலில் அடைக்கப்பட்ட நிலையில், ஒரு வழியாக 21 நாட்கள் கழித்து 3வது ஜாமீன் மனு மீதான விசாரணைக்கு பிறகுதான் ஜாமீன் கிடைத்தது.
இந்த சட்டப் போராட்டத்தில் கிடைத்த இடைக்கால வெற்றியின் பூரிப்பு ஷாருக்கான் குடும்பத்தில் எல்லோருடைய முகங்களிலும் நேற்று முதலே எதிரொலித்து வருகிறது.

பிறந்தநாள் பரிசு
ஆர்யனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதால் அவரது வீட்டில் கொண்டாட்ட சூழல் நிலவி வருகிறது. நவம்பர் 2 ஆம் தேதி ஷாருக்கின் பிறந்தநாள் வருகிறது. ஆர்யனின் விடுதலை அவருக்கு சிறந்த பிறந்த நாள் பரிசாக இருக்கப்போகிறது. தனது பிறந்த நாள் மற்றும் தீபாவளிக்கு மகன் தன்னோடு இருக்கப்போவதை நினைத்து ஷாருக்கான் மகிழ்ச்சியிலிருப்பதாக கூறப்படுகிறது. அந்த மகிழ்ச்சியை வழக்கறிஞர்கள் குழுவோடு அவர் பகிர்ந்து கொண்டார்.

தாய் சபதம்
ஆர்யனின் ஜாமீன் மூலம் அவரது தாய் கவுரி சபதம் நிறைவேறியுள்ளது. ஆர்யன் கான் விடுதலையாகி வீட்டிற்கு வரும் வரை இனிப்பு சாப்பிட மாட்டேன் என்று சபதம் செய்திருந்தார் கவுரி கான். எனவே, நவராத்திரி நேரத்தில் வீட்டில் இனிப்பு பாயாசம் செய்ய வேலைக்காரர்களுக்கு கவுரி தடை போட்டிருந்தார். இப்போது கணவர் பிறந்த நாள், தீபாவளி என வரிசையாக கொண்டாட்ட தினங்களில் தனது மகன் தன்னோடு இருக்கப்போவது அவருக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

வழக்கறிஞர் குழு
கோர்ட் உத்தரவு வந்ததும் நேற்று மாலை ஷாருக்கான், தனது வழக்கறிஞர் குழுவான சதீஷ் மனேஷிண்டே மற்றும் அவரது டீமுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். மனேஷிண்டே இதுபற்றி கூறுகையில், கோர்ட் உத்தரவு வந்ததும் ஷாருக்கான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். அவரது சட்டப் போராட்டத்திற்கு பலன் கிடைத்து விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜாமீனில் விடுதலை
ஆர்யன் கான் இறுதியில் உயர்நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு விட்டார். அவரிடம் போதை மருந்து இல்லை, கடத்திய ஆதாரம் இல்லை, போதை மருந்தை சாப்பிட்டதாக ஆதாரம் இல்லை, சதி இல்லை. கைதான முதல் நொடியில் இருந்தே இதைத்தான் கூறி வருகிறோம் என்று மனேஷிண்டே பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Recommended Video

முகுல் ரோஹத்கி ஆஜர்
சதீஷ் மனேஷிண்டே மற்றும் அமித் தேசாய் போன்ற பிரபல வக்கீல்கள் ஷாருக்கான் மகனுக்கான சட்ட வல்லுநர்கள் குழுவில் இடம் பெற்றனர். ஜாமீன் கிடைக்காமல் போனதால், ஆர்யனின் வழக்கறிஞர் குழுவில் முகுல் ரோஹத்கி புதிதாக சேர்க்கப்பட்டார். இந்தியாவின் 14வது அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்தவர் முகுல் ரோஹத்கி என்பதால், எப்படியும் தனது திறமையால் ஜாமீன் பெற்றுத் தருவார் என்ற எதிர்பார்ப்பு அப்போதே எழுந்தது. 3 நாட்கள் தொடர் வாதம் நடத்தினார் முகுல் ரோஹத்கி. இறுதியாக ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications