Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

4 ஆண்டுகளில் மூன்று முறை துணை முதல்வர்.. வேற வேற சிஎம்.. அஜித் பவாரின் அசால்ட் ரெக்கார்டை பாருங்க

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 3 வது முறையாக அஜித் பவார் துணை முதல்வராக பொறுப்பேற்று இருக்கிறார். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் மூன்று முறை துணை முதல்வராக பதவியேற்கும் போதும் வெவ்வேறு முதல்வர்கள் என்பதுதான்... இது பற்றிய முழு விவரத்தை இங்கே பார்க்கலாம்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. பாஜக 105 இடங்களிலும் சிவசேனா 55 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஆனால் முதல்வர் பதவியை பெறுவதில் இந்தக் கூட்டணி உடைந்தது. திடீர் திருப்பமாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கை கோர்த்த உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்க இருந்தார்.

Ajit Pawar Became Deputy Chief Minister three times in 4 years But 3 Different Chief Minister

அப்போது, எதிர்பாராத வகையில் 2019 ம் ஆண்டும் நவம்பர் 23-ந் தேதி அதிகாலை நேரத்தில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், சரத்பவாரின் அண்ணன் மகனுமான அஜித்பவார் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர். எனினும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லாததால் அந்த ஆட்சி 3 நாட்களில் கவிழ்ந்தது. அதன்பிறகு மாநிலத்தில் சிவசேனா தலைமையில் மகாவிகாஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது.

இதனால், கடும் அதிருப்தி அடைந்த பாஜக, உத்தவ் தாக்கரேவை வீழ்த்த தக்க சமயம் பார்த்துக் கொண்டு இருந்தது. அப்போது உத்தவ் தாக்கரே முதல்வராகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவி வகித்தனர். இந்த நிலையில், திடீர் திருப்பமாக ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் தனி அணியாக சென்றார். இதனால் சிவசேனா உடைந்தது. பாஜகவுடன் இணைந்து ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்தார்.

அப்போது துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பு வகித்தார். இதற்கு மத்தியில் சிவசேனா கட்சியும் சின்னமும் ஏக்நாத் ஷிண்டே வசம் வந்தது. இதனால் எந்த வித சிக்கலும் இன்றி மகராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா- பாஜக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. இத்தகைய சூழலில், கடந்த வாரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் செயல் தலைவர் பொறுப்புக்கு சுப்ரியா சுலே நியமிக்கப்பட்டார்.

சரத் பவாரின் மகளான சுப்ரியா சுலே இந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டது அஜித் பவாருக்கு கடும் அதிருப்தியை கொடுத்தது. செயல் தலைவா் பதவி வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்த அஜித் பவார், கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் நடந்த கட்சி கூட்டத்தில் தனக்கு கட்சி பதவி வேண்டும் என நேரடியாக வலியுறுத்தினார். ஆனால், இதற்கு சரத் பவார் அசைந்து கொடுக்கவில்லை.

இதனால், கடும் அதிருப்தி அடைந்த அஜித் பவார் என்று திடீரென தனது தலைமையில் 30 எம்.எல்.ஏக்களுடன் ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தார். மகாராஷ்டிரா துணை முதல்வராக அஜித் பவார், மூத்த தலைவர்களான சக்கன் புஜ்பால், திலிப் வல்சே பாட்டீல், தனஞ்செய் முண்டே, அதிதி தத்காரே உள்ளிட்ட 9 பேரும் அமைச்சர்களாகவும் பதவியேற்றுவிட்டனர். தற்போது தன்னிடமே கட்சி இருப்பதாகவும் அஜித் பவார் கூறி வருகிறார். இதனால், மகாராஷ்டிர அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.

இதனிடையே, அஜித் பவார் கடந்த 4 ஆண்டுகளில் மூன்று முறை துணை முதல்வராக பொறுப்பேற்று இருக்கிறார். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் மூன்றும் வேறு வேறு முதல்வர்கள் என்பதுதான். அதாவது, கடந்த 2019 ஆம் ஆண்டு சிவசேனா, காங்கிரஸ் - தேசிய வாத காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது. அப்போது திடீரென பாஜகவுடன் இணைந்து அஜித் பவார் துணை முதல்வராக பொறுப்பேற்றார். எனினும் எம்.எல்.ஏக்கள் ஆதரவு இல்லாததால், வெறும் 80 மணி நேரத்தில் ஆட்சி கவிழ்ந்தது.

பின்னர், அஜித்பவார் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் சேர்ந்து அமைந்த மகாவிகாஸ் கூட்டணி ஆட்சியிலும் அஜித் பவார் துணை முதல்வராக பதவி ஏற்றார். ஏக்நாத் ஷிண்டே முதல்வரான பிறகு எதிர்க்கட்சி தலைவராக இருந்த அஜித் பவார், இன்று தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து மீண்டும் துணை முதல்வராக பதவியேற்று இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+