நான் என்சிபியில்தான் இருக்கேன்.. சரத்பவாரே என் தலைவர்.. ட்விட்டரில் குழப்பும் அஜித் பவார்
Recommended Video
மும்பை: நான் என்சிபியில்தான் இருக்கிறேன். எப்போதும் அங்குதான் இருப்பேன். சரத்பவார்தான் என்னுடைய தலைவர் என மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பால் தாக்கரே தலைமையில் சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என நேற்று முன் தினம் என்சிபி தலைவர் சரத்பவார் பேட்டி அளித்திருந்தார்.
இதையடுத்து நேற்றைய தினம் ஆளுநரை சந்தித்து சிவசேனா ஆட்சி அமைக்க உரிமை கோரும் என எதிர்பார்த்திருந்த நிலையில் நேற்று காலை விடிந்தும் விடியாததுமாக மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னவீஸும் துணை முதல்வராக என்சிபியின் அஜித் பவாரும் பதவியேற்றனர்.

அஜித் பவார்
இதனால் சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஷாக்காகின. இந்த நிலையில் அஜித் பவார் எடுத்துள்ள முடிவு என்சிபியின் முடிவல்ல. அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவாகும் என சரத்பவார் தெரிவித்திருந்தார்.

ட்விட்டர் பக்கம்
இந்த நிலையில் அஜித்பவார் மீது கட்சி ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
|
நிலையான ஆட்சி
அதில் நான் தேசியவாத காங்கிரஸில்தான் இருக்கிறேன். எப்போதும் அதில் தான் இருப்பேன். சரத்பவார்தான் என்னுடைய தலைவர். அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாஜக- என்சிபி கூட்டணி நிலையான ஆட்சியை மகாராஷ்டிராவில் கொடுக்கும்.

சிறிது பொறுமை
மாநிலம், மக்களின் முன்னேற்றத்துக்காக நாங்கள் பாடுபடுவோம். இதில் கவலைப்பட வேண்டியது ஒன்றும் இல்லை. அனைத்தும் நன்றாகத்தான் போய் கொண்டிருக்கிறது. சிறிது பொறுமையாக இருக்க வேண்டும். அனைவரின் ஒத்துழைப்பிற்கும் நன்றி என்று ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications