பாஜகவுக்கு ஒரே ஒரு MP, MLA இருக்கும் வரை இதை நடக்க விட மாட்டோம்.. மகாராஷ்டிராவில் சூளுரைத்த அமித் ஷா
மும்பை: "பாஜகவுக்கு மகாராஷ்டிராவில் ஒரே ஒரு எம்.எல்.ஏ அல்லது நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு எம்.பி இருக்கும் வரை மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை கொண்டு வர விட மாட்டோம்." என தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆக்ரோஷமாக பேசி உள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணியும், காங்கிரஸ் தலைமையில் சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணியும் களம் காண்கின்றன.

பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று ஜல்கானில் உள்ள ராவர் சட்டமன்றத் தொகுதி, புல்தானாவில் உள்ள மல்காபூர் தொகுதி ஆகியவற்றில் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றார் அமித் ஷார்.
அப்போது பேசிய அமித் ஷா, "காங்கிரஸ் கட்சி ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு எதிரானது. மகாராஷ்டிராவில் உலமாக்களின் பிரதிநிதிகள் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தபோது, முஸ்லீம் சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்குவதாக அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. உலமா கவுன்சில் கோரியபடி எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிகளுக்கான இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்க மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா பட்டோல் ஒப்புக்கொண்டுள்ளார்.
மகா விகாஸ் அகாதி தலைவர்களின் அதிகார மோகம், விளிம்புநிலை சமூகங்கள் மீதான நீண்டகால மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் திட்டத்தை நோக்கி கண்மூடித்தனமாக அவர்களை தள்ளியுள்ளது. பாஜக அனைத்து சமூகங்களின் நலனிலும் உறுதியாக உள்ளது, ஆனால் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது.
எஸ்.சி, எஸ்.டி, மற்றும் ஓபிசி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் கவலைப்படத் தேவையில்லை. மகாராஷ்டிராவில் ஒருபோதும் மகா விகாஸ் அகாதி அரசு அமைக்காது. பாஜகவுக்கு நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு எம்.பி அல்லது மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே ஒரு எம்.எல்.ஏ இருக்கும் வரை மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அவர்களால் கொண்டு வரவே முடியாது.
மகா விகாஸ் அகாதி கூட்டணி கட்சிகள் தங்கள் அதிகார மோக அரசியலால் நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டுள்ளனர். அவர்கள் வாக்குகளுக்காக தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தலுக்கு உட்படுத்துகின்றனர். காங்கிரஸ் மற்றும் என்சிபி (எஸ்பி) தலைவர் சரத் பவார், ராமர் கோயில் கட்டுவதை பல தசாப்தங்களாக எதிர்த்தனர். நரேந்திர மோடி பிரதமரான பிறகுதான், அயோத்தியில் பிரமாண்ட கோயில் கட்டுவதன் மூலம் பிரச்சனை தீர்க்கப்பட்டது. மகாராஷ்டிரவிற்கான பாஜகவின் பார்வை, சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் கொள்கைகளுடன் ஒத்துப்போகிறது" எனப் பேசியுள்ளார் அமித் ஷா.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications