சுகாதார மையத்துக்கே போக வேண்டாம்.. ட்ரோன் மூலம் வீட்டு வாசலுக்கே வரும் தடுப்பூசி.. எங்கே தெரியுமா?
மும்பை: கொடிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இந்த ஓமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் ஓமிக்ரான் வைரஸ் இந்தியாவுக்குள் புகுந்து விட்டது. நாட்டில் இதுவரை 111 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

முழுமையான ஆயுதம் இதுதான்
மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 30-க்கும் மேற்பட்ட ஓமிக்ரான் வைரஸ் பாதிப்புகள் உள்ளன. கர்நாடகா, குஜராத், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு என பல மாநிலங்களில் ஓமிக்ரான் வைரஸ் கால் பதித்து விட்டது. இப்படி பல வகையில் தொடர்ந்து உருமாறி வரும் கொரோனவை முழுமையாக கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே முழுமையான ஆயுதமாகும்.

மாவட்ட நிர்வாகம் சோதனை
இதனால்தான் ஒவ்வொரு நாடும் தடுப்பூசி செலுத்தும் பணியை போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது. இந்தியாவிலும் தடுப்பூசி மக்களுக்கு விரைவாக போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள குக்கிராமத்திற்கு ட்ரோன் மூலம் தடுப்பூசி கொண்டு செல்லப்பட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது. பால்கர் மாவட்ட நிர்வாகம் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ட்ரோன் மூலம் தடுப்பூசி
அதாவது ஜவ்ஹரில் இருந்து ஜாப் என்னும் மலை கிராமத்திற்கு ட்ரோன் மூலம் 300 தடுப்பூசிகள் கொண்ட ஒரு பெட்டி எடுத்து செல்லப்பட்டு சோதனை செய்யப்பட்டது. வழக்கமாக ஆட்கள் மூலம் கொண்டு செல்லப்படும்போது 40 நிமிடங்களுக்கு மேல் எடுக்கப்பட்ட பணி, தற்போது ட்ரோன் மூலம் 9 நிமிடங்களில் முடிந்து விட்டதாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தொடர்ந்து ட்ரோன் மூலம் தடுப்பூசி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

தவறான எண்ணங்களை அகற்ற உதவும்
மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் தயானந்த் சூர்யவன்ஷி கூறுகையில், 'உதவி செய்ய முன்வரும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் இது சாத்தியமாகும். இது தடுப்பூசி இயக்கத்தில் முக்கியமான மைல்கல் ஆகும். ஏனெனில் தடுப்பூசி மையங்களை அடைய கடினமாக இருக்கும் கிராம மக்களின் வீட்டு வாசலுக்கு மருந்துகளை எளிதாக அனுப்ப முடியும். இது மக்கள் மனதில் இருந்து தடுப்பூசி தொடர்பான தவறான எண்ணங்களை அகற்ற உதவும்' என்று கூறியுள்ளார்.
-
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications