மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எனக்கு மன அழுத்த நோய் இருக்கு என்று கூற நான் வெட்கப்படவில்லை - ருக்மணி குமாரி

மனதை நலமாக வைத்துக்கொள்ளுங்கள் மன அழுத்தம், மனநோய், மன கவலைகளைப் பற்றி பேச வெட்கப்பட வேண்டாம். என்று ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ருக்மணி குமாரி கூறியுள்ள

Google Oneindia Tamil News

மும்பை: மனதை அழுத்தும் கவலைகள் இருந்தாலும் மன அழுத்தம் இருந்தாலும் அதனை தைரியமாக எதிர்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ருக்மணி குமாரி. தான் எத்தனை பிரச்சினைகளை சந்தித்தாலும் அரசியல்வாதியாகவும் பிசினஸ் பெண்ணாகவும் சாதித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். ருக்மணியின் ட்விட்டர் பதிவிற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

மன அழுத்தம் மெல்லக்கொல்லும் நோய். பிறரால் புறக்கணிக்கப்படும் போது மன அழுத்தம் அதிகரிக்கும். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணமும் மன அழுத்தத்தினால் ஏற்பட்டுள்ளதாகவே காவல்துறையினர் கூறியுள்ளனர். சின்னத்திரையில் அறிமுகமாகி பாலிவுட் பட உலகில் நுழைந்து தனக்கென தனி இடம் பிடித்தவர் சுஷாந்த் சிங். எம்எஸ் தோனி படத்தில் மகேந்திரசிங் தோனியாகவே வாழ்ந்திருந்தால்.

அழகு, அறிவு, புத்திசாலித்தனம், சினிமாவில் அவர் வெளிப்படுத்திய உடல் மொழி பல ரசிகர்களை கவர்ந்தது. மின்னி மறைந்த நட்சத்திரம் போல குறுகிய காலத்திலேயே பிரபலமான அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது சினிமா ரசிகர்களை மட்டுமல்லாது திரை உலக பிரபலங்களையும் இளம் அரசியல் தலைவர்களையும், விளையாட்டு வீரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மன அழுத்தம் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதனை வெளிப்படுத்துங்கள், சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள், மனம் விட்டு பேசுங்கள் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் இளம் பெண் தலைவர் ருக்மணி குமாரி

ஸ்காட்லாந்தில் இறந்த அரியலூர் இளைஞர்... பெற்றோரிடம் உடலை மீட்டுத்தந்த தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.ஸ்காட்லாந்தில் இறந்த அரியலூர் இளைஞர்... பெற்றோரிடம் உடலை மீட்டுத்தந்த தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.

சுஷாந்த் சிங்கிற்கு இரங்கல்

சுஷாந்த் சிங்கிற்கு இரங்கல்

சுஷாந்த் சிங் மரணத்திற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார் ருக்மணி குமாரி, நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார் என்ற சோகமான செய்தியை கேள்விப்பட்டேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் ஓம் சாந்தி என்று பதிவிட்டுள்ளார்.

எனக்கு மன அழுத்தம் இருக்கிறது.

எனக்கு மன அழுத்தம் இருக்கிறது.

எனக்கு மன அழுத்தம் இருக்கிறது. AnxietyDisorder எனப்படும் அதீத உணர்ச்சிவசப்படக்கூடிய நோயும், மனச்சோர்வும் எனக்கு இருக்கிறது. அதற்காக நான் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறேன். அதை சொல்ல நான் ஒருபோதும் வெட்கப்படவில்லை என்று தனது மற்றொரு பதிவில் கூறியுள்ளார். நான் அரசியல்வாதி, பிசினஸ் உமன் எனக்கு மன அழுத்த நோய் இருக்கிறது. அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறேன் என்று வெளிப்படையாக கூறுவதற்கு வெட்கப்படவில்லை.

உங்களை நேசியுங்கள்

உங்களை நேசியுங்கள்

மன அழுத்தம் ஏற்படும் போது குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுங்கள். ஒருபோது தனிமையில் இருக்காதீர்கள். இசையை ரசியுங்கள். நல்ல புத்தகங்களை படியுங்கள், சுவையான உணவுகளை சாப்பிடுங்கள். பயணம் செய்யுங்கள். அன்பானவர்களை நேசியுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள். முக்கியமான ஒன்று உங்களை நீங்களே நேசியுங்கள் என்றும் பதிவிட்டுள்ளார் ருக்மணி குமாரி.

வெளிப்படையாக சொல்லுங்கள்

வெளிப்படையாக சொல்லுங்கள்

மன அழுத்தமும் மனக்கவலையும் ஒருவரின் கேரக்டரை பாதிக்கும் வீக்னெஸ் கிடையாது இதை வெளிப்படையாக சொல்வதில் தவறெதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த பதிவிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து கமெண்டுக்களை பதிவிட்டுள்ளனர். மன நலம் குறித்து இப்படி தன்னுடைய அனுபவங்களை பதிவிட்டு வெளிப்படையாக அரசியல் தலைவர் பேசுவது ஊக்கமும் உற்சாகத்தையும் தருகிறது என்று பிரபல பாலிவுட் நடிகைகள் பதிவிட்டுள்ளனர்.

மன நல பிரச்சினை

மன நல பிரச்சினை

சுஷாந்த் சிங்கின் மரணம் பல பிரபலங்களை மன வேதனைக்கு ஆளாக்கியுள்ளது. பலரும் தங்களின் சொந்த அனுபவங்களையும் மன நோய்க்கு எதிராக போராடி வருவது பற்றியும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். தற்கொலை எண்ணம் வந்தாலே தவிர்த்து விட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

English summary
Rukshmanii Kumari, President All India Professionals Congress in Rajasthan, said that she had survived depression and anxiety disorder and they do not define who she is as a person.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X