ரயிலில் கொல்லப்பட்ட காதர்.. இந்தியாவிலிருந்தே வெளியேறும் குடும்பம்! பாதுகாப்பே இல்லை என பகீர் புகார்

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தியாவில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் நாட்டை விட்டே வெளியேறப்போவதாக, ஜெய்பூர் - மும்பை ரயிலில் ஆர்பிஎப் வீரரால் சுட்டுக் கொல்லப்பட்டவருடைய மகன் அறிவித்து உள்ளார்.

ஜெய்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்றுகொண்டு இருந்த ரயில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் வைதர்னா என்ற ரயில் நிலையத்தை தாண்டி பால்கர் அருகே இந்த ரயில் சென்றுகொண்டு இருந்தபோது ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது.

Family of Mumbai - Jaipur train gunshoot victim planned to get out of India

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் சேத்தன் சிங், பட்டியல் சமூகத்தை சேர்ந்த ரயில்வே பாதுகாப்பு படை உயரதிகாரி எஸ்ஐ டீக்காராம் மீனா, 3 முஸ்லிம் ரயில் பயணிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். அக்தர் அப்பாஸ் அலி (48), காதர் பன்புர்வாலா (58), சையது சைபுத்தீன் (43) ஆகிய பயணிகள் இதில் கொல்லப்பட்டனர்.

இதில் சையது என்பவரை கொன்ற பின், அவரது உடலை கீழேபோட்டுவிட்டு, "பாகிஸ்தான் தொடர்பில் இருந்தவர்களை கொலை செய்து உள்ளேன். இந்தியாவில் வாழ வேண்டும் என்றால் நீங்கள் மோடிக்கும் யோகிக்கும் ஓட்டு போட வேண்டும்." என பேசினார். இஸ்லாமியர்கள் அமர்ந்திருக்கும் இடங்களுக்கு தேடி சென்று அவர்களை கொன்றதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

Family of Mumbai - Jaipur train gunshoot victim planned to get out of India

அதே நேரம் ரயில்வே நிர்வாகம் சேத்தன் சிங் மனநலம் பாதிக்கப்பட்டதாக விளக்கமளித்தது. இந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட காதர் பன்புர்வாலாவின் மகன் ஹுசைன் பன்புர்வாலா தற்போது வெளியிட்டு இருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அவர் தெரிவித்து உள்ளதாவது, "என்னுடைய குடும்பத்தினர் இனி இந்தியாவில் வாழ்வதை பாதுகாப்பாக உணரவில்லை. இந்த கொலைகள் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணையில் எங்களுக்கு திருப்தி இல்லை. இந்த கொலைகளுக்கான நோக்கத்தை அதிகாரிகள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

மகாராஷ்டிரா மாநில அரசும் எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. எனக்கு நிறைய கேள்விகள் உள்ளன. சேத்தன் சிங் தன்னை வீட்டுக்கு விடாததால் தன்னுடைய உயர் அதிகாரியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், என்னுடைய தந்தையையும், வெவ்வேறு பெட்டிகளில் இருந்த பயணிகளையும் சேட்டன் சிங் ஏன் கொலை செய்தார் என்பது பற்றி போலீஸ் எந்த விளக்கத்தையும் தரவில்லை.

ஆர்பிஎப் வீரர் சேட்டன் சிங் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தால், எப்படி தாடி வைத்த பயணிகளை மட்டும் குறிவைத்து சுட்டுக் கொலை செய்தார்? விசாரணையில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளை 4 முறை பார்த்தும் எங்கள் கேள்விகளுக்கு அவர்களால் பதிலளிக்க முடியவில்லை. இப்போது நான் அந்த பெட்டியில் பயணித்த மற்ற பயணிகளையும் தேடி கண்டுபிடித்து முழு உண்மையை அறிய விரும்புகிறேன்.

சுட்டுக்கொல்லப்பட்ட காதர், மத்திய பிரதேசத்தில் இருந்து தனது சொந்த ஊரான நலசோபராவுக்கு மொகரம் விடுமுறைக்காக ரயில் சென்றபோதுதான் ஆர்பிஎப் வீரரால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார். விரைவில் தன்னுடைய மகனுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த தந்தைக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டு உள்ளது.

"நாங்கள் துபாயில் பணிபுரிந்து வருகிறோம். என்னுடைய அம்மாவையும் துபாய்க்கே அழைத்து செல்ல உள்ளோம். இந்தியாவுக்கு திரும்பி வரும் எண்ணமே எங்களுக்கு இல்லை. இங்கு எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாஜக இல்லாத கட்சிகளின் தலைவர்கள் எங்களை சந்தித்து உதவ முன்வைத்தனர். ஆனால் ஆளும் சிவசேனா எந்த உதவியும் செய்யவில்லை." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+