சுதந்திர போராட்டத்தில் அனைவரும் சிறை செல்லவில்லை.. சிலர் ஒதுங்கினர்! ஆர்எஸ்எஸ் மோகன் பகவத் பேச்சு
மும்பை: ‛‛சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று அனைவரும் சிறை செல்லவில்லை. சிலர் ஒதுங்கி இருந்தனர். ஆனால் நாடு விடுதலை பெற வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் பரவலாக இருந்தது'' என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார்.
நம் நாடு இந்த ஆண்டு 75 வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு சிறப்பாக செய்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் சுதந்திர போராட்டம் குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாகபுரியில் விதர்பா சாகித்திய சங்கம் சார்பில் மராத்திய இலக்கிய அமைப்பின் நூற்றாண்டு விழா நேற்று நடந்நதது. இந்த விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

ஒரு தலைவரால் முடியாது
நாட்டில் உள்ள அனைத்து சவால்களையும் ஒரு தலைவரால் மட்டுமே சமாளிக்க முடியாது. இது சங்க சித்தாந்தத்தின் அடிப்படையாகும். அவர் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் அவரால் அதனை செய்ய முடியாது. ஒரு அமைப்பு, ஒரு கட்சி, ஒரு தலைவரால் மட்டுமே நாட்டில் மாற்றத்தை கொண்டு வர முடியாது. மாற்றம் கொண்டுவர அமைப்பு, கட்சி மற்றும் தலைவரால் கொண்டுவர உதவி செய்யப்படும். சாமானிய மனிதன் எழுந்து நிற்கும்போதுதான மாற்றங்கள் ஏற்படும்.

மக்களால் கிடைத்த வெற்றி
இந்திய சுதந்திர போராட்டம் 1857 ல் துவங்கியது. நாட்டின் சுதந்திரம் குறித்து மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டு சாமானியர்கள் வீதிகளில் இறங்கி போராடியபோது தான் சுதந்திர போராட்டம் வெற்றி பெற்றது. சுதந்திர போராட்டத்துக்குப் புரட்சியாளர்கள் பங்களித்தனர். ஆங்கிலேயர்களுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மிகப்பெரிய சவால் அளித்தார்.

அனைவரும் சிறை செல்லவில்லை
இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் சுதந்திரத்துக்காக போராட மக்கள் தைரியம் பெற்றனர். சுதந்திரத்துக்காக போராட்டத்தில் பங்கேற்று அனைவரும் சிறை செல்லவில்லை. சிலர் அதில் இருந்து ஒதுங்கி இருந்தனர். ஆனால் நாடு விடுதலை பெற வேண்டும் என்ற எண்ணம் பரவலாக இருந்தது.

ஆர்எஸ்எஸ்ஸிடம் வழங்க வேண்டாம்
தலைவர்கள் சமூகத்தை உருவாக்கவில்லை. சமூகம் தான் தலைவர்களை உருவாக்குகிறது. நாட்டை முன்னேற்றுவத்துக்கான ஒப்பந்தத்தை மற்றவர்களிடம் மக்கள் வழங்கக்கூடாது. ஆர்எஸ்எஸிடம் கூட அந்த ஒப்பந்தத்தை வழங்க வேண்டாம். அவரவர் பணியை செய்து நாட்டின் நிலையை மேம்படுத்தும் பொறுப்பை மக்கள் ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications