மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு வருடம் டைம் கொடுங்க மராத்தியில் புகுந்து விளையடுகிறேன்... சொல்கிறார் பவார் அண்ணன் பேரன்

Google Oneindia Tamil News

மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் அண்ணன் பேரன் பர்த் பவார் சரியாக தாய் மொழியான மராத்தியில் பேச முடியாமல் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் மாவால் தொகுதியிலிருந்து பர்த் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் சரத்பவாரின் அண்ணன் பேரன். ஆவார் 28 வயதே நிரம்பிய இவர் முக்கிய அரசியல் கட்சி ஒன்றின் இளம் அறிமுக வேட்பாளாக உள்ளார். ஆனால் இவருக்கு சரளமாக மராத்தி மொழி பேச வராததால் எதிர்கட்சியினர் கிண்டல் செய்து வருகின்றனர்.

Give me one year... will change my Rusty Marathi: Parth Pawar says

காங்கிரஸ் என்றால் கப்சிப்.. பாஜக என்றால் அமைதியோ அமைதி.. கமல் பிரச்சாரத்தில் இதை கவனிச்சீங்களா?காங்கிரஸ் என்றால் கப்சிப்.. பாஜக என்றால் அமைதியோ அமைதி.. கமல் பிரச்சாரத்தில் இதை கவனிச்சீங்களா?

அவரது மராத்தி பேச்சு பெரும்பாலும் கிராமப்புற பகுதிகளிலும் பேரணிகளில் நீண்ட பேச்சுக்களை பேசவும் அவருக்கு உதவ போதுமானதாக இல்லை என அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்ந்து ஏளனம் செய்து வருகின்றனர்

பர்த் பவாரின் தந்தை அஜித் பவார், மகாராஷ்டிர மாநில முன்னாள் துணை முதல்வராக இருந்த ஒரு மூத்த கட்சித் தலைவராவார். குடும்பத்தில் அரசியலால் குழப்பம் மேலும் ஏற்படாமல் இருக்க இந்த மக்களவை தேர்தலில் போட்டியிட பர்த் பவாரை முதலில் வெளிப்படையாக தேர்வு செய்தது சரத் பவார் தானாம்

லண்டனில் பயின்ற பர்த் பவார் கடந்த மாதம் மராத்தி மொழியில் பேசிய பேச்சு வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியது. அந்த பேச்சில் தனக்கு எதிராக போட்டியிடுபவர்கள், குறிப்பாக சிவசேனா கட்சியை கடுமையாக கேலி செய்து பேசியிருந்தார் பர்த் பவார். ஆனால் பர்த் பவாரின் தப்புத் தப்பான மராத்தி பேச்சு குறித்து அவரிடம் கேட்ட போது தாம் கடைசியாக பேசிய இரு பேச்சுக்கள் நன்றாகவே அமைந்ததாக குறிப்பிட்டார்.

நான் அரசியலில் குதித்து ஒரு மாதம் தானே ஆகிறது. தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் கலந்த மராத்தி பேச்சை கற்று வருகிறேன். மேலும் அனுபவமிக்க பேச்சை கொடுக்க எனக்கு ஒரு வருடம் அவகாசம் கொடுங்கள் என தனியார் செய்தியாளர் ஒருவரிடம் அளித்த பேட்டியில் பர்த் பவார் கூறியுள்ளார். மேலும் வேலைவாய்ப்பின்மையை போக்குவது என்பதே தனது முக்கிய குறிக்கோள். ஏனெனில் இந்தியா இளைஞர்கள் நிறைந்த நாடு என கூறியுள்ளார்

மேற்கு மகாராஷ்டிராவில் உள்ளது மாவல் தொகுதி தொழில்துறை மற்றும் விவசாய பகுதியாக திகழ்கிறது இந்த தொகுதி இங்கு பர்த் பவாரை தெரியுமா என்ற கேள்வி எழும் அளவிற்கு அவர் பிரபலமாகவில்லை என எதிர்கட்சியினர் சாடி வருகின்றனர். எனவே கடந்த சில வாரங்களாக மாவால் தொகுதிகளில் உள்ள முக்கிய கோவில்களுக்கு செல்வது உள்ளூர் ரயில்களில் பயணம், மாட்டு வண்டிகளில் பயணம் என பலவகையிலும் தன்னை மக்கள் முன் பர்த் பவார் அடையாளப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது

English summary
Sharad Pawar Grand nephew Parth Pawar has sought one year time to spake Marathi fleuently.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X