Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிலவில் நீர், செவ்வாயில் வீடுகள்.. 100 அடியில் உயிர் ஊசலாடுகையில் இதெல்லாம் எதற்கு?.. ஹர்பஜன் சிங்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    we dont have any technology to rescue the child who is struggling for life- Harbhajan

    மும்பை: நிலவில் நீர், செவ்வாயில் குடியிருப்பு எதற்காக இத்துணைக் கண்டுபிடிப்புகள் என கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

    திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ- கலாமேரி தம்பதியின் 2 வயது மகன் சுஜித் வில்சன். இவர் நேற்று முன் தினம் அவரது வீட்டில் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.

    Harbhajan Singh tweets that no technology to rescue Sujith from 100 feet depth

    இவர் அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டார். இவரை மீட்க கடந்த 3 நாட்களாக தீயணைப்பு துறையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ஊர் மக்கள், போலீஸார், தமிழக அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் போராடி வருகின்றனர்.

    இந்த நிலையில் தம்பி நீ வந்தாதான் தீபாவளி, உனது தாய்ப்பாலுக்கு வீரம் உண்டு. நீ மீண்டு வா என கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். சுஜித் மீண்டு வர பிரார்த்தனை செய்யும் அனைவரும் விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறி வரும் நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க இன்னும் ஏன் எந்த கருவிகளையும் கண்டுபிடிக்கவில்லை என கேள்வி எழுப்புகின்றனர்.

    அதுபோல் ஹர்பஜனும் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் இன்னொரு ட்வீட்டில் நிலவில் நீர்,செவ்வாயில் குடியிருப்பு,எதற்காக இத்துணைக் கண்டுபிடிப்புகள்?நூறு அடியில் உயிரொன்று ஊசலாடுகையில் விஞ்ஞானமும் நாமும் எதற்கு. #சுர்ஜித் பூமி தாய் வயிற்றில் கருவாகி இருக்கிறாய். பிரசவ வலி அந்த தாய்க்கு பதில் உனக்கு பொறுத்துக் கொள் சாமி. விழித்துக்கொள் தேசமே #savesurjeeth என்று தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+