மும்பையை பிரித்து மேய்ந்த மழை... தண்டவாளத்தில் தேங்கிய மழை நீர் - புறநகர் ரயில்சேவை நிறுத்தம்
மும்பை மாநகரத்தின் தெற்குப் பகுதியில் பருவமழை சூறையாடத் தொடங்கியுள்ளது. தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மும்பை: தென்மேற்குப் பருவமழை மராட்டியத்தை ஸ்பரிசிக்க ஆரம்பித்துள்ளது. மும்பை நகரத்தில் ஆரம்ப நாளிலேயே அமர்களமாக தொடங்கியுள்ளது. வெளுத்து வாங்கிய மழை மும்பை நகரத்தினை முதல் நாளிலேயே புரட்டிப்போட்டுள்ளது. தாழ்வான பல பகுதிகள் வெள்ள நீரில் மிதக்கின்றன. வாகனங்கள் நீந்திச் செல்கின்றன. தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
நாட்டின் பல மாநிலங்களை தென்மேற்குப் பருவமழை தனது கரங்களால் அணைக்கத் தொடங்கியுள்ளது. மூன்று மாத காலம் மழையைக் கொடுக்கப் போகும் தென்மேற்குப் பருவமழை நடப்பாண்டு இயல்பான அளவில் இருக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
அந்தமானில் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை கேரளா, தமிழகம் என பயணித்து தற்போது மும்பையை நனைத்துள்ளது. ஆரம்பமே அமர்களம் என்பது போல வெளுத்து வாங்கியுள்ளது மழை. கனமழையால் சாலைகளில் ஆறுகள் போல வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது.

8 செமீ பதிவு
மும்பையில் வழக்கமாக 10ஆம் தேதி பருவமழை தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஒருநாள் முன்னதாகவே மழை தொடங்கியுள்ளது. காலை 8 மணி வரைக்கும் நகரத்தின் கொலபா பகுதியில் 8 செமீ மழையும், சாந்தாகுரூர் பகுதியில் 6செமீ மழையும் பதிவாகியுள்ளது.

வாகன ஓட்டிகள் பாதிப்பு
ப்ரீச்கேண்டி மருத்துவமனைப் பகுதிகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. வாகனங்கள் மிதந்து செல்கின்றன. மாதுங்கா கிங்ஸ் சர்க்கில் பகுதிகளில் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு இடையே வாகனங்களை ஓட்டி செல்கின்றனர்.

வெள்ளநீரில் மூழ்கிய தண்டவாளங்கள்
மழை ஆரம்பித்த முதல்நாளிலேயே மும்பை நகரத்தின் பல பகுதிகள் வெள்ளநீரினால் சூழப்பட்டுள்ளது. தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் பல ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. சியான் ரயில் நிலையம் ஜிடிபி ரயில் நிலையத்திற்கு இடையே தண்டவாளங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

புறநகர் ரயில்கள் நிறுத்தம்
மழை வெள்ளம் காரணமாக மும்பையில் புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளநீர் வடிந்த பின்னர் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மும்பை, தானே சுற்றுவட்டாரப்பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு?












Click it and Unblock the Notifications