Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கழட்டு நீயே".. அண்ணன் செத்துடுவான்.. பெண்ணிடம் "ரகசிய ரூமில்" சாமியாரின் அட்ராசிட்டி.. கொடுமை..!

நிர்வாணப்படுத்தி பெண்ணை பலாத்காரம் செய்த சாமியார் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

மும்பை: ரகசிய அறைக்குள் இளம்பெண்ணை சாமியார் அழைத்து சென்று, அங்கு நடத்திய பாலியல் சேட்டைகள் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

சமீப காலமாகவே மூடநம்பிக்கைகள் அதிகரித்து வருகின்றன... இது தொடர்பான குற்றங்களும் பெருகி வருகின்றன.. அளவுக்கு அதிகமான மூடநம்பிக்கைகள் சிதறி கிடப்பதாலும், பெரும்பாலான கிராம மக்களுக்கு படிப்பறிவு குறைவு என்பதாலும், இத்தகைய குற்றங்கள் சர்வசாதாரணமாகிவிட்டது.
அதிலும், வடமாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது.. வயது வித்தியாசமின்றி பாலியல் துன்புறுத்தல்கள் வெகுஇயல்பாகிவிட்டது.

மாந்திரீகம்

மாந்திரீகம்

இத்தகைய குற்றங்களுக்கு தண்டனைகளும் கடுமையாக இருப்பதில்லை.. இதற்கு நடுவில், மாந்ரீகம், மத விஷயங்களின் மேல் நம்பிக்கை வைத்து, அதனால் பல விபரீதங்களை சந்திக்கும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன... குறிப்பாக, மந்திரம் என்ற பெயரில், பாதிக்கப்பட்டவர்களின் பலவீனத்தை பயன்படுத்தி, அவர்களை மிரட்டி பிழைக்கும் சாமியார்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது.. அப்படி ஒரு சம்பவம்தான் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது..

 60 வயது சாமியார்

60 வயது சாமியார்

இத்தனைக்கும், மகாராஷ்டிராவில் மூடநம்பிக்கைக்கு எதிரான சட்டம் அமலில் உள்ளது.. அப்படி இருந்தும் இந்த கொடுமை நடந்துள்ளது அதிர்ச்சியை கூட்டி வருகிறது. அந்த சாமியாருக்கு 60 வயதாகிறது.. ரொம்ப நாளாகவே அந்த பகுதியில் சாமியார் என்ற பெயரில் சுற்றி கொண்டு வந்துள்ளார்.. யார் யாரெல்லாம் பிரச்சனை, நோய் என்று வருகிறார்களோ, அவர்களுக்கு திருஷ்டி கழிப்பதாக சொல்லி, அல்லது மாந்திரீகம் செய்வதாக சொல்லி, பணத்தை கறந்துவிடுவார்.. இதில் பெண்கள் சிக்கினால், அவர்களை பாலியல் ரீதியாகவும் இந்த சாமியார் பயன்படுத்தி கொள்வார்.

 ஸ்பெஷல் பூஜைகள்

ஸ்பெஷல் பூஜைகள்

இது எதுவுமே தெரியாத ஒரு அப்பாவி பெண், சாமியாரை சந்தித்துள்ளார்.. தன்னுடைய குடும்ப பிரச்சனைகளை ஒன்றுவிடாமல் சொல்லி அழுதுள்ளார்.. எல்லா பிச்சனைகளையும் அமைதியாக கேட்ட சாமியார், "இவ்வளவுதானே.. நான் உன் பிரச்சனையை தீர்த்து வைக்கிறேன்.. ஆனால், அதற்கு ஸ்பெஷல் பூஜைகள் செய்ய வேண்டும்" என்றார்... எப்படியோ, கஷ்டம் தீர்ந்தால் போதும் என்று நினைத்த அந்த பெண்ணும், சிறப்பு பூஜைக்கு ஒப்புக்கொண்டார்.. பிறகு, இன்னொரு நாள் அந்த பெண்ணை மட்டும் தனியாக வரும்படி சாமியார் வரவழைத்தார்..

 ரகசிய ரூம்

ரகசிய ரூம்

அந்த பெண் வந்ததும், அவரை ஒரு ரகசிய ரூமுக்குள் அழைத்து சென்றார்... பிறகு, அந்த பெண்ணின் ஆடைகளை அவிழ்க்குமாறு சொன்னார்.. இதைக் கேட்டு அந்த பெண் அதிர்ந்துவிட்டார்.. டிரஸ்ஸை கழட்ட முடியாது என்று சொல்லி உள்ளார்.. அதற்கு அந்த சாமியார், "பூஜை நடக்கும்போது இப்படி மாட்டேன் என்று சொல்லக்கூடாது.. அப்படி நீ டிரஸ்ஸை கழட்டவில்லை என்றால், உன் அண்ணன் இறந்துடுவார்.. உனக்கு பிறக்கும் குழந்தையும் ஊனமாக பிறக்கும்" என்று கடுமையான குரலில் சொன்னார்..

 டுபாக்கூர் சாமியார்

டுபாக்கூர் சாமியார்

இதை கேட்டு பயந்துபோன அந்த பெண், சாமியார் சொன்னபடி ஆடைகளை அவிழ்த்தார்... அதற்கு பிறகு அந்த சாமியார் பூஜையை செய்வார் என்று பார்த்தால், அந்த பெண்ணை திடீரென கட்டிப்பிடித்து பாலியல் கன்றாவிகளில் ஈடுபட்டார்... சாமியாரின் பிடியில் இருந்து மீள முடியாத அந்த பெண், இறுதியில், தனக்கு நடந்த கொடுமை குறித்து அண்ணனிடம் அழுதுகொண்டே முறையிட்டார்.

கல்வியறிவு

கல்வியறிவு

அதைக் கேட்டு மிரண்டு போன குடும்பத்தினர் உடனடியாக இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசாரும் வழக்கு பதிவு செய்து, அந்த டுபாக்கூர் சாமியாரை கைது செய்துள்ளனர்.. நாளுக்கு நாள் வடமாநிலங்களில் இப்படி ஒரு கொடுமை நடப்பதற்கு காரணமே அங்கு கல்வி மறுக்கப்படுவதும், மறக்கடிக்கப்படுவதும்தான் என்பதை வேதனையோடு நாம் பதிவு செய்ய வேண்டி உள்ளது..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+