இடைவிடாமல் பரவும் கொரோனா வைரஸ்.. இந்தியா உள்பட உலக நாடுகளில் மொத்தம் 57.76 கோடி பேர் பாதிப்பு
மும்பை: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் தினமும் அதிகரித்து வருகின்றனர். இதுவரை மொத்தம் 576,832,260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் வூகானில் 2019ல் கொரோனா வைரஸ் பரவ துவங்கியது. அங்கிருந்து பல நாடுகளும் இந்த வைரஸ் பரவியது. இதனால் ஒட்டுமொத்த உலகமும் பெரும் பாதிப்பை சந்தித்தது.

கொரோனா பாதிப்புக்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. 3 அலைகளாக கொரோனா வைரஸ் இந்தியாவை தாக்கி ஏராளமானவர்களை கொன்று குவித்துள்ளது.
இதனால் இந்தியா உள்பட உலக நாடுகள் ஊரடங்கை அமல்படுத்த துவங்கியது. மேலும் கொரோனா தடுப்பூசி ஆய்வுகளும் துவங்கியது. இதையடுத்து தான் கொரோனா பாதிப்பு குறைய துவங்கியது. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து தாக்க துவங்கியது. கொரோனா டெல்டா, டெல்டா ப்ளஸ் அதிக அளவில் மக்களின் உயிரை காவு வாங்கியது. ஓமிக்ரான் வைரஸ் பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும் அதிக அளவில் உயிர் பலி ஏற்படவில்லை.
இதற்கிடையே தான் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இதனால் பெரும்பாலான நாடுகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது பெரும்பாலான நாடுகளில் கொரோனா பரவல் என்பது குறைந்துள்ளது. இருப்பினும் முடிவு பெறவில்லை.
இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் 576,832,260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 6,406,914 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 546,754,575 ஆக உள்ளது. தற்போது 23,670,771 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 23,629,166 பேர் நலமாக உள்ளனர். 41,605 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications