அவ்வளவுதான்.. கதை ஓவர்.. அதே விஷயத்தை காரணம் காட்டி மூத்த வீரரை ஓரம் கட்டிய கோலி.. ட்விஸ்ட்
மும்பை: நியூசிலாந்து எதிரான இந்திய அணியின் முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில் இன்று இரண்டாவது டெஸ்ட் நடக்க உள்ளது. இதில் இந்திய அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. உணவு இடைவேளைக்கு பிறகே டாஸ் போடப்பட்டு ஆட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இன்றைய போட்டியில் இந்திய அணியில் கோலி மீண்டும் களமிறங்க உள்ளார்.

கேப்டன்
கோலி கேப்டனாக வர உள்ள நிலையில் அணியில் இருந்து ஒரு வீரரை நீக்க வேண்டும். இந்த நிலையில்தான் இன்றைய போட்டியில் இஷாந்த் சர்மா, ஜடேஜா, ரஹானே ஆட மாட்டார்கள் என்று உறுதியாகி உள்ளது. ஜடேஜா, இஷாந்த் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டு இருப்பதால் இவர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் ரஹானேவும் காயம் அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நீக்கம்
பொதுவாக இந்திய அணியில் ஒரு வீரரை நீக்க வேண்டும் என்றால் அவரை நீக்குவதற்கான உண்மையான காரணத்தை கோலி சொல்ல மாட்டார். பெரும்பாலும் காயம் ஏற்பட்டது என்பார். இல்லையென்றால் அதிகபட்சம் அணியின் தேவை கருதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது, ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்பார்கள். வீரர்களின் மோசமான பார்ம் காரணமாக ஒருவர் நீக்கப்பட்டாலும் கூட அவர் ஏன் நீக்கப்பட்டார் என்ற செய்தியை கோலி சொல்லவே மாட்டார்.

மோசமான ஆட்டம்
இந்த நிலையில்தான் தற்போது மோசமான ஆட்டம் காரணமாக ரஹானே நீக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக இவர் டெஸ்டில் சரியாக ஆடுவது இல்லை. மோசமான பார்மில் இருக்கிறார். கோலி வருகையை அடுத்து நன்றாக ஆடும் ஷ்ரேயாஸ் ஐயரை அணியில் இருந்து நீக்க முடியாது. அதேபோல் ஒரே போட்டியில் சொதப்பியதை காரணம் காட்டி மயங்க் அகர்வாலை நீக்கவும் முடியாது.

ரஹானேகோலி
இதன் காரணமாக மோசமாக ஆடிய ரஹானேவை கோலி துணிச்சலாக நீக்கி இருக்கிறார். ஆனால் கோலி அந்த காரணத்தை சொல்லாமல் ரஹானேவிற்கு காயம் என்று குறிப்பிட்டுள்ளார். காயம் என்று கூறி ரஹானேவை உட்கார வைத்துள்ளார். ரஹானே மோசமான பார்மில் இருக்கிறார். வயதும் ஆகிவிட்டது. ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் சிறப்பாக ஆடி வருகிறார்கள்.
Recommended Video

நீக்கம்
இதனால் இனி ரஹானே டெஸ்ட் போட்டியில் தொடர் வாய்ப்புகளை பெறுவாரா என்பதே சந்தேகம்தான் என்கிறார்கள். இனி பெரும்பாலும் தேர்வுக்குழு அவரை தேர்வு செய்ய வாய்ப்பு குறைவு. இன்று ஆடும் இந்திய அணியில், மயங்க் அகர்வால், கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சாஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், ஜெயந்த் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் ஆடுகிறார்கள்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications