சந்தோசம்.. உலக அரங்கில் இந்தியாவிற்கு புதிய இடம் கிடைத்துவிட்டது.. பிரச்சாரத்தில் மோடி பெருமிதம்!

இந்தியா தற்போது உலக அரங்கில் புதிய இடத்தை பெற்று இருக்கிறது என்று பிரதமர் மோடி மஹாராஷ்டிராவில் பிரச்சாரத்தில் பேசி உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தியா தற்போது உலக அரங்கில் புதிய இடத்தை பெற்று இருக்கிறது என்று பிரதமர் மோடி மஹாராஷ்டிராவில் பிரச்சாரத்தில் பேசி உள்ளார்.

மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா தேர்தலை முன்னிட்டு மீண்டும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பிரதமர் மோடி, மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீண்டும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர்.

மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் இந்த மாதம் 21ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. மேலும் 24ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக கட்சிகள் எல்லாம் தற்போது மிக தீவிரமாக தயாராகி வருகிறது.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இந்த நிலையில் மஹாராஷ்டிராவில் பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில், பாஜக சிவசேனா கூட்டணி சார்பாக தேவேந்திர பட்நாவிஸ் தலைமையின் கீழ் இங்கு வலிமையான ஆட்சி அமைய வேண்டும். அதற்காகத்தான் நான் இங்கு பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறேன். லோக்சபா தேர்தல் நீங்கள் பாஜகவிற்கு கொடுத்த ஆதரவிற்கு நன்றி. வலிமையான இந்தியாவிற்காக நீங்கள் வாக்களித்தீர்கள்.

புதிய இந்தியா

புதிய இந்தியா

ஒரு புதிய இந்தியா வேண்டும் என்பதற்காக நீங்கள் வாக்களித்தீர்கள். இதன் மூலம் இந்தியா தற்போது உலகில் புதிய இடத்தை பெற்று இருக்கிறது. 130 கோடி மக்களின் ஆசை நிறைவேறி இருக்கிறது. இந்த தேர்தலில் வாக்களித்த பெண்கள் எல்லோருக்கும் நன்றி. சட்டசபை தேர்தலிலும் இதேபோல் எங்களுக்கு ஆதரவு அளியுங்கள்.

வேகமாக வளைகிறது

வேகமாக வளைகிறது

புதிய இந்தியா நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. நம்முடைய எதிர்காலம் மிக சிறப்பாக இருக்கிறது. நம்மை உலக நாடுகள் ஆதரித்து வருகிறது. நாம் பழைமையில் ஊறி கிடக்கவில்லை. நாம் எதிர்காலத்தை நோக்கி வளர்ந்து வருகிறோம்.

பேச்சு

பேச்சு

நாம் நிறைய சவால்களை எதிர்கொண்டு வருகிறோம். சில கட்சியை சேர்ந்த தலைவர்கள் அண்டை நாட்டு தலைவர்கள் பேசுவதை போல பேசுகிறார்கள். அண்டை நாட்டு தலைவர்கள் சொல்லும் கருத்துக்களை அவர்கள் இந்தியாவில் இருந்து கொண்டு குறிப்பிடுகிறார்கள். அவர்களுக்கு இடையில் நல்ல தொடர்பு இருக்கிறது, என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+