மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சர் நாராயண் ரானேவிற்கு பெயில்: நீதிமன்றம் உத்தரவு
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சர் நாராயண் ரானே இன்று மஹாத் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இதையடுத்து மஹாத் நீதிமன்ற இவருக்கு பெயில் வழங்கி உத்தரவிட்டது.
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை கன்னத்தில் அறைவேன் என்று மத்திய அமைச்சர் நாராயண் ரானே கூறிய நிலையில் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார். இவர் மீது மகாராஷ்டிராவில் பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார்களை தொடர்ந்து இவர் மீது 4 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து ரத்தினகிரி போலீசார் மூலம் இவர் கைது செய்யப்பட்டார்.

அங்கு இவருக்கு எதிராக ஐபிசி 189 (அரசு ஊழியருக்கு காயம் ஏற்படும் அச்சுறுத்தல்), 504 (பொது அமைதியை குலைக்கும் விதமாக வேண்டுமென்றே அவமதிப்பு) மற்றும் 505 (தீங்கு விளைவிக்கும் வகையில் பேசுதல்) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. இவர் தன் மீதான எப்ஐஆரை நீக்க வேண்டும் என்று மும்பை ஹைகோர்ட்டில் தொடுத்த வழக்கை மும்பை ஹைகோர்ட் அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்டது.
இந்த நிலையில் இவர் நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றே மும்பையில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மஹாத் நீதிமன்றத்தில் போலீசார் இவரை போலீசார் ஆஜர்படுத்தினார்கள். இதில் நாராயண் ரானே வழக்கறிஞர்கள், நாராயண் ரானேவின் உடல்நிலையை காரணம் காட்டி பெயில் கேட்டனர். அதோடு இந்த கைது நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று வாதம் வைத்தனர். மாறாக இவரை 7 நாள் காவலில் எடுக்க மஹாராஷ்டிரா போலீஸ் கோரிக்கை விடுத்தது. ஆனால் மஹாத் நீதிமன்ற இவருக்கு பெயில் வழங்கி உத்தரவிட்டது.

வழக்கு பின்னணி:
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் புதிதாக மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட கொண்ட நாராயண் ரானே மும்பையில் கடந்த சில நாட்களாக 'ஜன் ஆசீர்வாத யாத்திரை' என்ற பெயரில் பேரணி நடத்தி வந்தார்.
இந்த யாத்திரையில் பேசிய நாராயண் ரானே, இந்தியா சுதந்திரம் அடைந்த தினம் கூட உத்தவ் தாக்கரேவிற்கு தெரியவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்து எத்தனை வருடங்கள் ஆகியுள்ளது என்று கூட அவருக்கு தெரியாமல் உதவியாளரிடம் கேட்கிறார். அவர் இப்படி பேசும் போது நான் அருகில் இருந்திருந்தால் அவரின் கன்னத்திலேயே அறைந்திருப்பேன் என்று நாராயண் ரானே குறிப்பிட்டு இருந்தார்.
இவரின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் இன்று கைது செய்யப்பட்டார். இந்த கைது சம்பவத்திற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் மும்பையில் பல்வேறு இடங்களில் பாஜகவினர் போராடி வருகிறார்கள்.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications